30 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் ஆகவில்லையா இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

செய்திகள்

30 வயதை கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களும் தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடும்.இப்படி திருமணம் கால தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்கள் மிக விரைவில் திருமணம் நடைபெற கல்யாண பரிகாரம் செய்ய வேண்டும்.


திருமணம் சீக்கிரம் நடக்க விரும்பும் பெண்கள் எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற ஒரு வியாழக்கிழமை தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு உடல் மற்றும் மன சுத்தியுடன் 7 மஞ்சள், 7 துண்டு வெல்லம்,7 பாக்கு, 7 மஞ்சள் தடவப்பட்ட பூணூல், 7 நாணயங்கள் 70 கிராம் கொண்டைக்கடலை, 70 சென்டிமீட்டர் மஞ்சள் துணி ஆகியவற்றை அவர்கள் கைப்படத் தொட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் வீட்டிற்கு விலக்கான தினத்தில் இந்த பரிகாரத்தை செய்ய கூடாது.

பூஜை அறையில் சிவன் பார்வதி சேர்ந்து இருப்பது போன்ற சிறிய அளவிலான படம் ஒன்றை வாங்கி வைக்க வேண்டும்.பிறகு அந்தப் படத்திற்கு முன்பு இரண்டு தீபங்கள் ஏற்றி, “என்னுடைய திருமணம் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என மனமுருக சிவன் பார்வதி முன்பு வழிப்பட வேண்டும்.


திருமணம் நல்லபடியாக முடிந்தால் காணிக்கை செலுத்துவதாகவும் வேண்டிக் கொள்ள வேண்டும்.இதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்து உள்ள அத்தனை பொருட்களையும் அந்த மஞ்சத் துணியில் போட்டு முடிந்து வீட்டில் யாருக்கும் தெரியாத இடத்தில் வைத்து விட வேண்டும்.

மேற்சொன்னபடியே தொடர்ந்து 40 நாட்களுக்கு சிவ பார்வதியை வழிபாடு செய்ய வேண்டும்.40 வது தினத்தன்று, அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று வீட்டில் மஞ்சள் துணியில் முடிச்சு போட்டு வைத்த பொருட்கள் மற்றும் சிவ பார்வதிக்கு செலுத்த வேண்டிக் கொண்ட காணிக்கை தொகையையும், அந்த சிவன் கோயில் அர்ச்சகருக்கு தானமாக கொடுத்து விட வேண்டும்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வந்தால் திருமண தடை ஏற்பட்டுள்ள பெண்களுக்கு மிக விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் சிறப்பாக நடைபெறும்.திருமணம் விரைவில் நடை பெற விரும்பும் ஆண்கள் முதலில் நல்ல தரமான மஞ்சள் தூள் சிறிதளவு மற்றும் குங்குமப்பூ வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.


எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வியாழக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து குளிப்பதற்கு முன்பாக நீங்கள் குளிக்கின்ற தண்ணீர் உள்ள பக்கெட்டில் சிறிதளவு மஞ்சள் தூளையும் ஒரே ஒரு குங்குமப்பூ துணுக்கையும் போட்டு நன்கு கலந்து அந்த நீரைக் ஊற்றி ஆண்கள் குளிக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை 11 வாரங்கள் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து செய்து வரும் ஆண்களுக்கு மிக விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும்.திருமணத்திற்கு வரன் பார்க்க செல்லும் பொழுது ஆண்கள் புத்தம் புதிய துணியை அணிந்து கொண்டு செல்வதால் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற திருமண தோஷம் நீங்கி வரன் சிறப்பாக அமையும்.

திருமணம் விரைவில் நடக்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் மாதத்தில் வருகின்ற ஏதேனும் ஒரு ஞாயிறு, செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற அம்பாள் கோயிலுக்கு செல்ல வேண்டும்.கோயிலுக்கு சென்ற பிறகு அம்பாலின் திருவடியில் “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்” என்ற மந்திரத்தை துதித்தபடியே சிறிது சிறிதாக குங்குமத்தை இடவேண்டும்.


பிறகு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து அம்பாளை மனதார வழிபாடு செய்த பிறகு அங்கு நீங்கள் இட்ட அந்த குங்குமம் அனைத்தையும் சேகரித்து ஒரு குங்கும சிமிழில் போட்டு அடைத்து, வீட்டிற்கு கொண்டு வரவேண்டும்.தினந்தோறும் காலையில் குளித்து முடித்த பிறகு கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட குங்குமத்தை சிறிதளவு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்து வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிக விரைவில் திருமண யோகம் கைகூடி, வந்து திருமணம் நல்ல முறையில் நடைபெறும்.மேற் சொன்ன பரிகாரத்தை கோயிலில் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே அம்பாள் படத்திற்கு முன்பாக பரிகாரத்தை செய்யலாம் என்று கூறப்படுகிறது.