அரச சேவையிலுள்ள பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு..!!

செய்திகள்

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக பணியில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைய பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைப்பதற்கான பரீட்சையை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்த பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் உள்ள 341 பரீட்சை மையங்களில் இந்த பரீட்சை நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.இந்த பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை பரீட்சார்த்திகளுக்கு அனுப்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் செய்துள்ளது.

இதேவேளை பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேவையான பட்டதாரிகளின் எண்ணிக்கை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடத்தப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.