திருமணப் பந்தம் என்பதே கணவரோடு சேர்ந்து வாழ்வதற்கு தான். பணத்திற்கோ இல்லை வேறு எதோ சந்தர்பத்திற்காகவோ கணவன் வெளிநாடு சென்றால், அந்த நாட்களை சில காலங்கள் கழித்து திரும்பி பார்க்கையில் வெறுமையே மிஞ்சும்.என்னுடைய வாழ்வில் கிடைத்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன்.

என்னுடய தந்தை நான் சிறுமியாக இருந்த போது காஞ்சிபுரத்தில்(600 கி.மீ தொலைவு) வேலை செய்தார்கள். விவசாயத்தின் மீது இருந்த அதீத பற்று காரணமாக அதை பார்த்துக் கொள்ள என்னையும்,என் அம்மாவையும் அவர்களுடைய அம்மா வீட்டில் விட்டு சென்றார்கள், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை எங்களைப் பார்க்க வருவார்கள்.
ஆனால் என் அப்பா வந்து போன பின் இரண்டு நாட்கள் என் அம்மா கவலையோடே இருப்பார்கள். நானும் சரியாக சாப்பிடாமல், என் பள்ளியில் இருந்து அம்மாவுக்கு தகவல் கொடுத்தார்கள். ‘இந்துவின் அப்பாவை சீக்கிரம் ஊருக்கு transfer வாங்கி வர சொல்லுங்கள்,உங்கள் மகள் சரியாக சாப்பிடுவதில்லை, சரியாக படிப்பதில்லை என்று’. பிறகு என் அப்பா எனக்காக அரும்பாடுப்பட்டு ஊருக்கு வேலையை மாற்றலாகி வந்தர்கள்.

எனவே தோழி உங்களுடைய மனநிலை மற்றும் உங்கள் குழந்தைகளின் மனநிலையை உணர்ந்து உங்கள் கணவரோடு நீங்களும் வெளிநாடு செல்லுங்கள்.இல்லை உங்கள் கணவரை நம் நாட்டில் வேலை செய்ய சொல்லி இங்கே நிம்மதியோடு வாழுங்கள்.
