வௌிநாடு செல்லும் தாய்மாருக்கு முக்கிய அறிவிப்பு!

செய்திகள்

பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் குறைவான பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அத்துடன் 2 வயதிற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்ட


தாய்மாருக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை 2 வயதிற்கும் மேற்பட்ட பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சமர்ப்பிப்பது

கட்டாயமானதாகும் என பணியகம் தெரிவித்துள்ளது.மேலும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி சட்ட ரீதியான முறையில் வௌிநாடுகளுக்கு பயணிக்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.