கோவிலிற்கு பொங்கலிட வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி..!!! யாழில் சம்பவம்.!

செய்திகள்

யாழ்ப்பாணம் காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் நேற்றையதினம் (10.3.2023) வைரவர் பொங்கல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் பிட்டியெல்லை தச்சம்பனை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பொங்கலிட பொங்கல் பொருட்களுடன் சென்றவேளை அந்த ஆலய பிரதம குருக்கள் பொங்க விடாது தடுத்து பொங்கல் பொருட்களுடன் திருப்பி அனுப்பியுள்ளார் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.


அதனைத்தொடர்ந்து ஆலயத்திற்கு சற்றுத் தள்ளி நிற்கும் மரத்திற்கு கீளே உள்ள ஒரு கல்லினை கடவுளாக வைத்து அந்த பெண் பொங்கல் பூசையை நடாத்தியுள்ளார்.”நான் கடந்த 10 ஆண்டுகளாக விசுவாசமாக அந்த ஆலயத்திற்கு பொங்கல் பூசை செய்து வருகிறேன். அவர்கள் நேற்று என்னை தடுத்து விட்டார்கள் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

அந்த கோவிலுக்கு நிதி வளங்குனர்கள் சமய பெரியவர்கள் இப்படி பலர் உள்ளனர். இது இவ்வாறு இருக்க குருக்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது என ஊர்மக்கள் கேள்வி எழுப்பினர்.பௌத்த பேரினவதிகள் சிலர் சைவ மதத்தை திட்டமிட்டு அழிக்கின்றனர், ஒதுக்குகின்றனர் என பலர் ஆதங்கப்படுகின்ற இந்த நேரத்தில் சைவ மக்களே இவ்வாறு நடந்துகொள்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.