தங்கப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! தங்கம் வாங்க சரியான நேரம்..!!

செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளது.1,95,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கம் நேற்றைய தினத்தில் 1,40,000 ரூபா வரை குறைவடைந்ததாக இலங்கை தங்காபரண சங்கத்தின் செயலாளர் இரத்னராஜா சரவணன் குறிப்பிட்டார்.எனினும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் இன்று 1,45,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.


இதேவேளை, 22 கரட் தங்க நகையானது சேதாரம், செய்கூலியுடன் 1,45,000 ரூபா முதல் 1,55,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.