வருங்கால கணவர் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

செய்திகள்

குடும்பத்தினருடன் எவ்வளவு அன்பாக பழகுகிறார், எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கிறார் என்பதை வைத்தே அவருடைய சுபாவத்தை மதிப்பீடு செய்துவிடலாம்.ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களது வருங்கால கணவரைப் பற்றி நிறைய கனவுகள் இருக்கும். தனது துணைவர் அழகானவராகவும், வசதி படைத்தவராகவும் இருக்க வேண்டும் என்பதை விட நல்ல குணம் படைத்தவராக இருக்க வேண்டும்


என்பதே இன்றைய தலைமுறை இளம் பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒரு ஆண் பார்ப்பதற்கு ஒழுக்கமானவராக இருக்கலாம். ஆனால் அவருடைய குணத்தை பார்த்த உடனேயே மதிப்பிட்டு விட முடியாது. அதனால் தன்னுடைய எதிர்கால கணவர் எப்படிப்பட்ட குணம் கொண்டவர் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியமானது. எதிர்கால துணையை தேர்ந்தெடுக்கும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

திருமணத்திற்கு முன்பு ஆண்களுக்கு ஒருசில குடும்ப கடமைகள் இருக்கும். அதனையெல்லாம் நிறைவேற்றிவைத்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற மன நிலையில் இருப்பார்கள். குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் கடமைகளை நிவர்த்தி செய்துவிட்டு திருமணத்திற்கு தயாராகிவிடுவார்கள். ஒருசிலர் குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கலாம்.


அப்படி கட்டாயத்தின் காரணமாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தால் அவரை விட்டு விலகுவது நல்லது. திருமணம் என்பது இரு மனங்கள் உணர்வுப்பூர்வமாக சங்கமிக்கும் பந்தமாகும். அதன் புனிதம் காக்கப்பட வேண்டும். அதனை அறிந்தவராக துணைவர் இருப்பது அவசியம்.

திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை முறை வேறு. திருமணத்திற்கு பிறகு பொறுப்புள்ள குடும்ப தலைவனாக மாற வேண்டியிருக்கும். அவரின் பேச்சில் அதன் தாக்கம் பிரதிபலிக்க வேண்டும். அதைவிடுத்து திருமண பந்தம், குடும்ப கட்டமைப்பு மீது ஈர்ப்பு இல்லாதவராக இருந்தால் அவரை தேர்ந்தெடுப்பதை தவிர்த்துவிடுவது நல்லது.


இரக்கம், கருணை, நேர்மை, நம்பகத்தன்மை, கடின உழைப்பு, அமைதியான சுபாவம் உள்ளிட்ட அறநெறிகளை கடைப்பிடிக்கும் நபராக இருக்கிறாரா? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இவைதான் குடும்ப பந்தத்தில் ஒருவரை நிலைநிறுத்தும் முக்கிய குணாதிசயங்கள். இந்த வழக்கங்களை கடைப்பிடிப்பவர்கள் நல்லது எது? கெட்டது எது? என்பதை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். கெட்ட பழக்கவழக்கங்களை கொண்டிருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை முழுமையாக நம்பலாம். அவருக்கு குடும்ப தலைவராகும் தகுதி உண்டு. உங்கள் மனம் கவர்ந்த அன்பான நபராகவும் இருப்பார்.

குடும்பத்துக்கும், அவருக்கும் இடையேயான நெருக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதும் அவசியமானது. குடும்பத்தினருடன் எவ்வளவு அன்பாக பழகுகிறார், எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கிறார் என்பதை வைத்தே அவருடைய சுபாவத்தை மதிப்பீடு செய்துவிடலாம். ஒரு சிலர் குடும்பத்தினருடன் அவ்வளவாக பழகமாட்டார்கள். குடும்பத்தினர் மீது பாசம் கொண்டிருந்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள்.


அவர்களுடைய சுபாவம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்வது அவசியமானது. நல்ல வாழ்க்கை துணையை கண்டறிவது எளிதான காரியம் கிடையாது. சற்று சிரமப்பட்டுத்தான் ஆக வேண்டும். குடும்பத்துடன் அன்பாகவும், பாசமாகவும் இருந்தால் உங்கள் மீதும் பாசமாகத்தான் இருப்பார். ஒருசில குணங்களை கண்டறிந்து விட்டாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
வருங்கால கணவரிடம்

தன்னலமின்மை, உண்மையாக இருத்தல், உங்கள் நலனில் அக்கறை கொண்டிருத்தல் போன்ற குணாதிசயங்களையும் எதிர்பார்க்கலாம். அப்படிப்பட்ட கணவர் அமைந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
*உறவில் உறுதியாக இருப்பது மிகவும் முக்கியமான குணமாக கருதப்படுகிறது. எத்தகைய சூழ்நிலையிலும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ்வாவரா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர் குடும்பத்துடன் எத்தகைய உறவை பேணுகிறார் என்பதை ஆராய்ந்து பாருங்கள். அதுவே அவருடைய குணத்தை அடையாளம் காட்டிவிடும்.- source: maalaimalar