பிக் பாஸ் ஜனனியின் ரீல்ஸ் வீடியோக்கள் இணையவாசிகளின் நெஞ்சங்களை கொள்ளையடித்து வருகிறது.பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.

இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபலமடையவும் பிக் பாஸ் சீசன் 6 ற்கு செல்லவும் உதவியாக இருந்தது.பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது, அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார்.அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.

ஒரு கட்டத்தில் ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.இந்த நிலையில் தற்போது வித விதமாக பாடல்களுக்கு ரீல்ஸ் வீடியோக்கள் செய்து பதிவிட்டு வருகிறார். இவரின் ரீல்ஸ் வீடியோக்களை பார்க்கும் போது இவர் வர வர லாஸ்லியாவிற்கே டப் கொடுப்பார் போல் தெரிகிறது.

அந்த வகையில் தோப்பு மாதிரியான ஆடையொன்றை அணிந்துக் கொண்டு கலக்கலாக ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.இதனை பார்க்கும் போது இவர் வித்தியாசமான முறையில் மக்கள் மத்தியில் ரீச் கொடுக்கவுள்ளார் என்பது தெளிவாகிறது.இந்த வீடியோக்காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்க்கும் இணையவாசிகள், “ தோப்பு மாதிரியான ஆடையிலும் அழகாக தான் இருக்கிறார்” என கமண்ட் செய்து வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/CpcdB-fDa7V/?utm_source=ig_web_copy_link