அரச வேலைக்காக காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!!

செய்திகள்

அரசாங்க வேலைக்காக காத்திருப்போர் போராட்ங்களில் ஈடுபட்டால் அரச வேலை கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இவ்வாறு பேராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும் இலங்கை மக்களுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமன்றி, போராட்டங்கள் அல்லது நாசவேலைகளில் ஈடுபடுபவர்கள், அடையாளம் காணப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோர் தொடர்பான பதிவுகள் கணனியில் குறிப்பேட்டு


வடிவில் பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.அவ்வாறு அடையாளம் காணப்படும் நபர்கள் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது, ​​அவர்கள் சம்பந்தப்பட்ட வேலைக்குத் தகுதியற்றவர்களாகக் கருதுவதற்கான அடிப்படை ஆவணம் தயாரிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.