பூமி தன்னைத்தானே சுற்றும் போது விமானங்கள் ஏன் பறக்கின்றன? இடம் வந்தவுடன் கீழே இறங்கலாமே.!! சுவாரசியமான தகவல்.!!

செய்திகள்

விமானம் பூமியின் காற்றுமண்டலத்தில்தான் பறக்கிறது. விமானம் பறக்க (எஞ்சின் வேலை செய்ய) காற்றுதேவை. (ராக்கட் போல் அல்ல.) காற்றுவாயு மண்டலம் பூமியைச்சுற்றி அதே வேகத்தில் (1000மைல் ) சுழலுகிறது. அதனால் நீங்கள் ரயிலில் சென்றாலும், விமானத்தில் சென்றாலும் ஒன்றே. தூரத்தை கடக்க வேண்டும்.


ஒரு ராக்கெட்டை எடுத்து SpaceX , டிவிட்டர் எலான் மஸ்க் போல , வாயு மண்டலத்துக்கு வெளியே உயரம் 10,000கிமீ ( 6500மைல்) வெளியே செல்லுங்கள். மறுபடியும் இறங்குங்கள். கேட்பது சரி .குழந்தைகள் பலரும் உயர்நிலைப் பள்ளிகளில் கேட்கும் கேள்வி இதுதான் ! விளக்கி புரிஞ்சதா என கேட்டால் , தலையை பக்கவாட்டிலும் ஆட்டுவார்கள் , மேலும் கீழும் ஆட்டுவார்கள். ஏனென்றால் புரியவில்லை !

முதலில் பூமி சுற்றுகிறது என்பதை எவ்வாறு உறுதிப் படுத்த ? டிவியில் காண்பிக்கிறமாதிரியா ?சூரியனைப்பாருங்கள். சூரியனைத்தான் நாம் சுற்றிக் கொண்டிருக்கிறோம். சூரியன் சுழலுகிறது போல் காண்கிறோமா. அது சூரியன் சுழலுவதையல்ல நாம் சுழலுகிறோம். நட்சத்திரங்களும் சுழலுவதைக் கவனியுங்கள். தெற்கு பகுதிகளில் கடிகாரச்சுற்றிலும் வடக்கே எதிர்ச்சுற்றிலும் ஒன்றுக்கொன்று சுழலுகிறது.

பூமி ; மத்தியபகுதியில் ஒரு மணிக்கு 1000மைல் (1037.54) சுற்றுகிறது. மேலேயோ அல்லது கீழேயோ போகப்போக மெதுவாக சுற்றுகிறது. படத்தில் 1000மைல் என்பது எவ்வளவு என்று காண்பிக்கப் பட்டிருக்கிறது.சரி. ஒரு ராக்கட்டை எடுத்து மிகத்தூரத்தில் 10,000 கிமீ சென்று முழு பூமியையும் பார்க்க முடிந்தால், பூமி மிக மெதுவாக சுழலுவது காணமுடியும்.

பூமி சுற்றும் 1000mph வேகம் போலவே மேல் உள்ள காற்று மண்டலங்களும் சுற்றும். நாமும் சுற்றுகிறோம். அதனால் நிற்க உட்கார முடிகிறது. ஒரு வேளை காற்று மண்டலம் சுற்றாவிட்டால் நம்மை/நாம் 1000மைல் சூறாவளியால் அடித்து தூக்கிச் சென்றுவிடும்.அதனால் விமானம் பூமிக்குள்தான் செல்கிறது. ரயிலில் அதே வேகத்தில் செல்ல முடிந்தாலும் விமானத்தில் பறந்தாலும் ஒன்றே.