நம்மில் பெரும்பாலானோருக்கு உளவியல் சோதனைகளை செய்து பார்க்க பிடிக்கும். ஏனெனில் இந்த வகையான சோதனைகள் நம்மைப் பற்றி நமக்குத் தெரியாத ஆழமான உண்மையை வெளிப்படுத்துகின்றன. பொதுவாக நாம் அனைவருமே நம்மைப் பற்றி முழுமையாக வெளிப்படுத்துவதில்லை.

இதனால் நம்முள் இருக்கும் பல விஷயங்களை நாம் அறியாமல் வாழ்ந்து வருகிறோம். ஆனால் சில சூழ்நிலைகளில் நம்முள் புதைந்துள்ள விஷயங்கள் வெளிவந்து நம்மை ஆச்சரியப்படுத்தும். நம்மை நாமே புரிந்து கொள்ள சில வினாடி வினா உதவுகிறது. கீழே ஒரு வினாடி வினா கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒருவரின் ஆழ் உணர்வு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் ஒருவரின் குணாதிசயம்
எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வடிவமைக்கப்பட்டது.இந்த வினாடி வினாவில் ஒவ்வொரு ஜன்னலும் ஒவ்வொரு குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. நீங்கள் செய்ய வேண்டியது, பின்வரும் ஐந்து ஜன்னல்களில் ஒரு ஜன்னவை தேர்வு செய்து, உங்களின் சுவாரஸ்யமான குணாதிசயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜன்னல் 1நீங்கள் மற்றவர்களுடன் நன்கு பழகுவீர்கள். உங்களிடம் தலைமைத்துவ குணங்கள் இருக்கும். எதையும் கணக்கிட்டு சரியாக செயல்படக்கூடியவர். உங்களுக்கு முதலாளியாக இருக்கப் பிடிக்காது. உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நீங்கள் ஒருபோதும் வெட்கப்படமாட்டீர்கள். நேர்மையானவர்கள் மற்றும் பரஸ்பரம் உள்ளவர்கள்.

ஜன்னல் 2நீங்கள் ஒரு வீட்டுப் பறவை. குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவீர்கள். வேலையில் சற்று போட்டித்தனம் கொண்டவர்கள். ஆனால் குடும்பத்திற்கே முன்னுரிமை அளிப்பீர்கள். இப்போதைய வாழ்க்கையை ரசித்து வாழ்வீர்கள். உங்களுக்கு எல்லாவற்றையும் எப்படி சிறப்பாகச் செய்வது என்று நன்கு தெரியும். உங்கள் சக ஊழியர்களும் நண்பர்களும் உங்களை கண்ணியமானவர், நேர்மையானவர் மற்றும் உணர்திறன் உடையவர் என்று அறிவார்கள். மறுபுறம் நீங்கள் மிகவும் சென்சிடிவ்வானவர். இது சில நேரங்களில் உங்களுக்கு எதிராக செல்லலாம்.

ஜன்னல் 3இந்த ஜன்னலை தேர்ந்தெடுத்தவர் ஒரு சுதந்திரப் பறவை மற்றும் சமூகத்தின் விதிமுறைகளுக்கு இணங்காதவர். வாழ்வின் பெரும்பகுதியில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் மற்றும் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்வதில் கைதேர்ந்தவர். நீங்கள் மிகவும் ஒழுக்கமானவர் மற்றும் உங்களின் பேச்சுத்திறன் மற்றும் புத்திசாலித்தனம் மற்றவர்களை கவரும் வண்ணம் இருக்கும். நீங்கள் விசுவாசமானவர் மற்றும் அதே விசுவாசதத்தை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்ப்பீர்கள்.

ஜன்னல் 4இந்த ஜன்னலை தேர்வு செய்தவர்கள் ஒரு சிக்கலான லட்சியவாதி, அசாதாரணமான, படைப்பாற்றலைக் கொண்டவர்கள். சென்சிடிவ்வானவர்கள். இதயத்தில் உண்மையான காதலைக் கொண்டவர்கள். தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டவர் மற்றும் எப்போதும் வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர்.

ஜன்னல் 5நீங்கள் வெளிப்படையாக பேசமாட்டீர்கள் மற்றும் எப்போதும் தனித்து இருக்க விரும்புவீர்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்தவாறு வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவீர்கள். நீங்கள் ஒரு தூய ஆன்மா மற்றும் பொய் சொல்பவர்கள் மற்றும் ஏமாற்றுபவர்களை உங்களுக்கு பிடிக்காது. பல முக்கியமான விஷயங்களை மறந்துவிடுவீர்கள். இதற்கு சிறந்த தீர்வு, முக்கியமான விஷயங்களை மறக்காமல் இருக்க, ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு கொண்டு செல்வது தான்.