வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் மறந்தும்கூட இவற்றை செய்யாதீர்கள்!

செய்திகள்

வாரத்தின் மற்ற நாட்களைவிட வெள்ளிக் கிழமை என ஓர் சிறப்பு உள்ளது. ஏனெனில் வெள்லிகிழமை தெய்வாம்சம் நிறைந்த நாளாக கருதப்படுகின்றது.பலர் வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை செய்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம்.


அதேசமயம் வெள்ளிக்கிழமைகளில் சில காரியங்களை கண்டிப்பாக பெண்கள் செய்யக்கூடாது. அப்படி செய்வது குடும்பத்துக்கு ஆகாது என சொல்லப்படுகின்றது.வீட்டில் பூஜை அறையில் ஏற்றப்படும் குத்து விளக்கை புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். அதை தவிர்த்து தானாகவும், வாயால் ஊதியும் அணைக்கக் கூடாது.

இரவு நேரத்தில் வீட்டை கூட்டினால் குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது. ஈரத்துணி அணிந்துக் கொண்டும், ஈரமான தலையுடனும் பூஜை செய்யக் கூடாது.வாசல்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவற்றில் உட்காரக் கூடாது.விளக்கு ஏற்றிய பின்பு பால், தயிர், உப்பு, ஊசி என்பவற்றினை பிறருக்கு கொடுக்கக் கூடாது.


வெள்ளிக் கிழமைகளில் நம்முடைய வீட்டிற்குள் அல்லது வீட்டின் வெளியில் நகத்தை வெட்டக் கூடாது.வெள்ளிக் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்யவோ கூடாது.வெள்ளிக் கிழமைகளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம் என்பது நம்பிக்கை.வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கும், குபேரனுக்கு உரிய மிக உன்னதமான நாள். இதனால் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் குங்குமத்தை அணிவதும், குபேர குங்குமத்தை அணிவதும் குட்ம்பத்திற்கு நல்ல பலனைத் தரும்.
https://youtu.be/WgN-2EEltc0