இலங்கையில் தேசிய அடையாள அட்டை உருவான கதை.!! சுவாரசியமான வரலாற்று தகவல்.!

செய்திகள்

இலங்கையில் தேசிய அடையாள அட்டை உருவான கதை.இலங்கையில் 1968 ஜுன் 22 ஆம் ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இதன்படி 1971 இல் அதற்கான ஒழுங்குவிதிகள் நிறுவப்பட்டு, அனுமதிக்கப்பட்ட சட்டமானது. 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது.


1971 ஒக்டோபர் 01 ஆம் திகதி ஆட்பதிவு திணைக்களம் நிறுவப்பட்டது.972 செப்டம்பர் 14 ஆம் திகதியே ஆட்பதிவு திணைக்களத்தால் முதலாவது தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டது.அப்போது பிரதமராக இருந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கே முதலாவது அடையாள அட்டை கையளிக்கப்பட்டது.பின்னணி.

1964 ஒக்டோபர் 30 ஆம் திகதியே ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இலங்கையின் பிரதமராக இருந்த ஶ்ரீமாவும், இந்தியாவின் பிரதமராக பதவிவகித்த லால் பகதூர் சாஸ்திரியும் கைச்சாத்திட்டனர்.இந்த உடன்படிக்கையின் பிரகாரம் 5 இலட்சத்து 25 ஆயிரம் மலையகத் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் 3 இலட்சம் 25 ஆயிரம் பேருக்கு 1964 இற்கும் 79 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

எனினும், இவ்வுடன்படிக்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.இந்நிலையிலேயே இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை பதிவுசெய்து – அடையாளப்படுத்தும் நோக்கில் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.இலங்கைக்கு இந்திய வம்சாவளி மக்கள் சட்டவிரோதமாக வருவதை தடுப்பதே இதன் நோக்கமாகும்.தொகுப்பு – ஆர்.சனத்.தகவல்மூலம் – ஆட்பதிவு திணைக்களம்