உங்க திருமணம் என்ன தேதில நடந்ததுனு சொல்லுங்க? உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்!

செய்திகள்

அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. திருமண வாழ்வை நல்ல முகூர்த்த நாளில், கிழமையில் மற்றும் நல்ல நேரத்தில் செய்வது இல்லற வாழ்க்கைக்கு சிறந்த தொடக்கமாக இருக்கும். நியூமராலஜியின் படி, திருமணம் செய்யும் நாளும் மிகவும் முக்கியமானது.


உங்கள் திருமண நாளின் எண் உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கலாம். உங்கள் திருமண நாளை கணக்கிட அதிலுள்ள அனைத்து எண்களையும் ஒற்றை இலக்கம் வரும் வரை கூட்ட வேண்டும். உதாரணத்திற்கு, உங்களின் திருமண நாள் ஏப்ரல் 8, 2015 என்று வைத்துக்கொண்டால் உங்களின் திருமண எண் (8 + 4 + 2016 = 21, 2+1=3). இந்த இறுதி ஒற்றை எண் உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை நிர்ணயிக்கலாம்.

திருமண தேதி எண் 1இந்த தேதி சூரியனால் ஆளப்படுகிறது. இந்த நாளில் திருமணம் செய்பவர்களின் வாழ்க்கை வேடிக்கை நிறைந்ததாக இருக்கும், மேலும் அவர்களின் வாழ்க்கை காதல் நிறைந்ததாக இருக்கும். இந்த திருமணத் தேதியை சரியாகத் தேர்ந்தெடுப்பது, நீங்கள் மிகவும் அன்பான மற்றும் மென்மையான ஜோடி என்பதை குறிக்கிறது, இந்த நாளில் திருமணம் செய்தவர்கள் தங்கள் துணையை வாழ்நாள் முழுவதும் காதலிப்பார்கள், இவர்களின் திருமணம் பொதுவாக நீண்ட காலம் நீடிக்கும் திருமணமாகும்.


திருமண தேதி எண் 2இந்த நாளில் நடக்கும் திருமணத்தின் வெற்றிக்கு உணர்ச்சி முதிர்ச்சி ஒரு முக்கிய காரணியாக இருக்கும். இந்த நாளில் நடக்கும் திருமணத்தில் தம்பதிகளில் ஒருவரின் உணர்ச்சி முதிர்ச்சி குறைவாக இருக்கலாம், ஆனால் மற்றொருவரின் முதிர்ச்சி இந்த திருமணத்தை வெற்றிகரமானதாக மாற்றும். இந்த திருமண நாளில் அனைவரும் ஒன்று அல்லது இரண்டு கண்ணீர் சிந்தினால் ஆச்சரியப்பட வேண்டாம், ஏனென்றால் விழா நிச்சயமாக ஒரு உணர்வுப்பூர்வமான குணத்தைக் கொண்டிருக்கும். ஏனெனில் இது சந்திரனால் ஆளப்படும் நாளாகும்.

திருமண தேதி எண் 3நீங்கள் திருமணம் மீது நீண்ட காலமாக ஆர்வத்தில் இருந்தால் உங்களுக்கு 3 ஆம் நாள் மிகவும் பொருத்தமான நாளாக இருக்கும். இந்த நாளில் செய்யும் திருமணம் மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது, குறிப்பாக காதல் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு இந்த நாள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வியாழனால் ஆளப்படும் இந்த நாளில், அநேகமாக பல குழந்தைகள் பிறப்பார்கள், குடும்பங்கள் உங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். இந்த திருமணம் முதல் மூன்று வருடங்களுக்குள் முடிவடைய வாய்ப்புள்ளது, அதிலிருந்து தப்பித்து விட்டால் அது நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


திருமண தேதி எண் 4இந்த நாளை திருமண நாளாக தேர்ந்தெடுப்பவர்கள் திருமணம் கொண்டுவரும் அனைத்து கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இந்த தேதியின் சிறப்பு நம்பகத்தன்மை மற்றும் நிரந்தரம். இந்த நாளில் திருமணத்தில் ஒன்றுபட்ட தம்பதியினர் தங்கள் எல்லா இலக்குகளையும் அடைய ஒன்றாக வேலை செய்வார்கள். நீங்கள் வீடு வாங்கினாலும் சரி, குடும்பத் தொழில் தொடங்கினாலும் சரி, நீங்கள் செய்யும் அனைத்தும் முன்கூட்டியே கவனமாகத் திட்டமிடப்படும். பாதுகாப்பின் தேவை சில நேரங்களில் திருமணத்தின் உயிர்வாழ்விற்கான முக்கிய உந்துதலாக உள்ளது. குடும்பப் பெயரை விரிவுபடுத்துதல், எதிர்காலத்தை உருவாக்குதல் போன்றவை இந்த சனிபகவானால் ஆளப்படும் இந்த நாளின் சிறப்பாகும்.

திருமண தேதி எண் 5உங்கள் திருமண நாளுக்காக இந்த தேதியை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்கள் வருங்கால துணையுடன் நீங்கள் தொடர்பு கொள்வதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம். இந்த திருமண உறவு சலிப்பை எதிர்த்துப் போராடும். பயணங்கள் மற்றும் வசிப்பிட மாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். முன்கூட்டியே திருமணம் செய்துகொண்டு, படிக்கும் போது ஒருவருக்கொருவர் உதவி செய்து, சுறுசுறுப்பாகவும், தங்களைச் சுற்றியுள்ள உலகில் ஆர்வமாகவும் இருப்பார்கள். இது ஒரு புத்திசாலித்தனமான திருமணமாக இருக்கும்.


திருமண தேதி எண் 6உங்கள் திருமணத்தின் இந்த தேதியை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் திருமணத்திற்கு சுக்கிரனின் ஆசீர்வாதத்தைப் பெற்றீர்கள். காதல், மென்மை, அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவை இந்த திருமணத்தின் சிறப்பியல்புகளாகும். தங்கள் துணை என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனித்து, தங்கள் உறவை பல்வேறு சோதனைகளிலிருந்து காப்பாற்ற அவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டியிருக்கும். இந்த திருமணமானது சுக்கிரனால் ஆளப்படுகிறது, இது ஒவ்வொரு சூழ்நிலையிலும் நல்லிணக்கத்தை அனுமதிக்கிறது. உங்கள் காதல் இயற்கையாக இருக்கும், ஏனென்றால் அதுதான் இந்த திருமணத்தின் பலம்.

திருமண தேதி எண் 7உங்கள் திருமணத்திற்கு இந்த நாளை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், கடைசி நிமிடத்தில் உங்கள் திட்டங்களை மாற்ற தயாராக இருங்கள். எண் 7 எல்லா வகையிலும் ஆச்சரியங்களைக் குறிக்கிறது என்றாலும், இது கடைசி நிமிட இரட்சிப்பைக் குறிக்கும். யுரேனஸ் இந்த நாளை ஆள்கிறது, மேலும் எண் 7 தவறுகள் மற்றும் விவேகமற்ற முடிவுகளைக் குறிக்கும். ஒரே மாதிரியான பின்னணி, ஒரே மதம் அல்லது ஒரே தேசியம் இல்லாதவர்கள் முடிவு செய்யும் திருமண நாளாக இது இருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், தொடர் அதிர்ச்சிகளும், மாற்றங்களும் கொண்ட திருமணமாக இருக்கும்.

திருமண தேதி எண் 8இந்த நாளில் திருமணம் செய்பவர்கள் ஒருவரையொருவர் அக்கறையுடன் புரிந்துகொள்கிறார்கள், எனவே, முதல் சந்திப்பிலேயே, அவர்கள் ஒருவருக்கொருவர் படைக்கப்பட்டவர்கள் என்பது உடனடியாக இருவருக்கும் புரிந்து விடும். அவர்கள் ஒன்றாக வேலை செய்வதில் வெற்றி பெறுவார்கள், அவர்கள் அனைத்து விஷயங்களிலும் வித்தியாசமான ரசனை கொண்டவர்களாக இருப்பார்கள். இது துணையின் துணிச்சலைப் பாராட்டி, தங்கள் துணையின் தொழிலுக்காக தியாகம் செய்யத் தயாராக இருக்கும் இருவரின் திருமணமாகவும் இருக்கலாம். இவர்களுக்குள் ஏற்படும் சண்டைகள் விரைவாக தீர்க்கப்படும், மேலும் இந்த திருமணத்தில் துணையில் ஒருவர் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். இந்த நாளின் திருமணம் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது.


திருமண தேதி எண் 9உங்கள் திருமண நாளுக்காக இந்த தேதியை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், நீங்கள் ரகசியமான மற்றும் அமைதியான திருமணத்தை விரும்பலாம். நெப்டியூனின் செல்வாக்கின் கீழ், ஒரு தரப்பினர் திருமணம் காரணமாக தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்யலாம். கூட்டாளர்களுக்கு இடையே ஒரு வலுவான ஆன்மீக பிணைப்பு உள்ளது, அவர்கள் அறிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும். இந்த தேதியில் திருமணம் மிகவும் தனித்துவமானது. இந்த நாளில் திருமணம் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும்.Source:boldsky