வீட்டுக்கு பிரச்சனை வரபோகுதென்று இந்த செடியினை வைத்து கண்டுபிடிச்சிடலாமாம்..!! வாங்க பார்ப்போம்.!!

செய்திகள்

வீட்டின் அழகை மேம்படுத்தும் பல்வேறு செடிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மணி பிளாண்ட். வாஸ்துப்படி மணி பிளாண்ட் செடியானது, அதன் பெயரைப் போலவே செல்வத்தின் தாவரமாக கருதப்படுகிறது. இந்த செடி இருக்கும் வீட்டில் பணம் அதிகம் சேரும் என்பது நம்பிக்கை. மேலும் மணி பிளாண்ட் உள்ள வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் எப்போதும் இருக்கும்.


ஆனால் இந்த செடியை வீட்டில் வைத்திருந்தால், அதை சரியான வழியில், சரியான இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது கூறப்படுகிறது. சில சமயங்களில் வீட்டில் வைத்துள்ள மணி பிளாண்ட் செடியானது, அந்த வீட்டிற்கு வரவிருக்கும் பிரச்சனைகளை குறிக்கும் என்பது தெரியுமா? கீழே ஒரு வீட்டிற்கு வரவுள்ள பிரச்சனையை மணி பிளாண்ட் எப்படி வெளிப்படுத்துகிறது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இலைகள் காய்வதுசெடிகளில் மிகவும் குறைவான பராமரிப்பில் எளிதில் வளரக்கூடிய செடி தான் மணி பிளாண்ட். இந்த மணி பிளாண்ட் செடியின் இலைகளானது சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தும் காய்ந்து போகிறது என்றால், அந்த வீட்டில் ஏதோ ஒரு பெரிய பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். இது தவிர உங்களின் பணம் தேவையில்லாமல் செலவழிக்கப்படுவதையும் குறிக்கும்.


ஒருவேளை மணி பிளாண்ட் செடியை அதிக சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து காய்ந்து போனால், அதற்கு காரணம் வெயில் தானே தவிர, வீட்டிற்கு வரும் பிரச்சனை அல்ல.வாஸ்துப்படி, இதெல்லாம் வீட்டிற்கு லட்சுமி தேவி வரப்போகிறார் என்பதன் அறிகுறியாம்.. தெரிஞ்சுக்கோங்க..வாஸ்துப்படி, இதெல்லாம் வீட்டிற்கு லட்சுமி தேவி வரப்போகிறார் என்பதன் அறிகுறியாம்.. தெரிஞ்சுக்கோங்க..

வாஸ்துப்படி, நல்ல செழிப்பான ஒரு வீட்டில் இருந்து மணி பிளாண்ட் செடியை திருடிக் கொண்டு வந்து வீட்டில் வைத்தால், அந்த வீட்டில் பணம் அதிகம் சேரும். ஆனால் எடுத்த வீட்டில் உள்ளோருக்கு பண இழப்பு ஏற்படும். இந்நிலையில் மணி பிளாண்ட் செடியானது உங்கள் வீட்டில் இருந்தே திருடப்பட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எனவே மணி பிளாண்ட் செடியை வீட்டிற்கு வெளியே வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.

மணி பிளாண்ட் செடியை வீட்டில் வைக்கும் போது, அந்த செடி எந்த வேகத்தில் வேகமாக வளர்கிறதோ, அதே வேகத்தில் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். ஒருவேளை வீட்டில் வைக்கும் மணி பிளாண்ட் செடி வளராமல் இருந்தால், உங்கள் வீட்டில் பணம் சேர்வதற்கான அறிகுறி இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் இந்த சூழ்நிலையில் ஒரு வாஸ்து நிபுணரை அணுகி என்ன செய்வதென்று கேட்கலாம்.


வாஸ்துப்படி, மணி பிளாண்ட் செடியை சரியான திசையில் வைத்தால் தான், அதன் பலனைப் பெற முடியும். தவறான திசையில் வைத்தால், அது பண இழப்புக்களையும், பணப் பிரச்சனைகளையும் தான் சந்திக்க வைக்கும்.மணி பிளாண்ட் செடியை தென்கிழக்கு மூலையில் வைத்து வளர்த்தால், வீட்டில் பணம் பெருகும்.

மணி பிளாண்ட் செடியை வடகிழக்கு மூலையில் வைக்கக்கூடாது. இல்லாவிட்டால் அது திருமண வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.மணி பிளாண்ட் செடியை மேல் நோக்கி படர விட வேண்டும். கீழே தொங்க விடக்கூடாது. அதேப் போல் மேலே படர விட கயிறுகளை அல்லது நூலைப் பயன்படுத்தக்கூடாது.மணி பிளாண்ட் பச்சை நிறம். இந்த பச்சை நிறமானது புதனின் நிறம். எனவே இந்த மணி பிளாண்ட்டை வீட்டில் வைப்பதாக இருந்தால் புதன்கிழமைகளில் வையுங்கள்.