யால் இந்து ஆசானின் அருமையான விளக்கம்..!! குவியும் வாழ்த்துக்கள்.!

செய்திகள்

இன்று எனக்கு வயது 65. இன்றும் நான் மைதானத்திற்குள் நுழைகின்றேன் என்றால் நான் கடந்து வந்த பாதை யுத்த காலத்திலும் , பல இடர் நேரத்திலும் கொண்டிருந்த மன தைரியம் மற்றும் எம்மை வழி நடத்திய ஆசிரியர்கள் ,


வளர்ந்த சூழல் போன்றவையே முக்கிய காரணம்.வீட்டில் நின்றதை விட இந்து அன்னையின் மைதானத்தில் நின்ற காலமே அதிகம். இந்துவின் மாணவனாக , பயிற்றுனராக மற்றும் ஆசிரியராக இருந்து யாழ் வலய உதவி கல்வி பணிப்பாளராக இருந்து இன்று வரை பயிற்சிகளை நான் கைவிடவில்லை.

அதுவே நான் எனது சமூகத்தில் வெற்றிகரமாக வாழ்ந்ததாக கருதுகிறேன். என் அருமை இளையவர்களே, விளையாட்டு மற்றும் பயிற்சி உங்கள் வாழ்வில் பல வெற்றிகளை பெறச் செய்யும்.உங்கள் பிள்ளைகளையும் விளையாடுவதற்க்கு


ஊக்குவிப்பு மற்றும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.வெற்றி தோல்விக்கு அப்பால் அவர்கள் மன தைரியம் மிக்க தலைமுறையாக வளர்வார்கள்.மனித வாழ்வின் வெற்றிக்கு கல்வி மற்றும் விளையாட்டு இரு கண்களாக கருதுகிறேன்.இவற்றை ஊக்குவிப்பதன் மூலம் சமூக வெற்றிக்கு வழி சமைக்கலாம்.இன்று எமது ஆசானுக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.!