இலங்கையில் விமான கட்டணங்களில் திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி.!! எதிர்வரும் 16ஆம் திகதி முதல் அமுலில்.!!

செய்திகள்

விமானப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க துறைமுகங்கள், கடற்படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த புதிய கட்டணங்கள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளன.


இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் விமானக் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையின் வான் பரப்பை பயன்படுத்தும்

வெளிநாட்டு விமானங்கள் மூலம் வருடாந்த வருமானத்தை ஒரு கோடியே இருபது இலட்சம் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.