அஞ்சாலை மீன்கள் பவளப்பாறையின் இடுக்குகள், பொந்துகளில் மறைந்திருந்து வாழும். கடல் குச்சிகளை உண்டு வாழும் இவற்றின் குணம் விசித்திரமானதாகும். மீன் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும், மீன்களுக்குரிய செல்கள் இவற்றுக்கு இல்லை.கடலில் வாழும் மீன்கள் உணவுக்காக பயன்படுகிறது. சில மீன்கள் விஷம் பொருந்தியதாகவும் உள்ளன.

ஆபத்தை ஏற்படுத்தும் மீன்களில் ஒன்றுதான் அஞ்சாலை. மீனின் தலைப்பாகமும், உடலும் பாம்பு போன்று இருக்கும். அஞ்சாலை மீன்கள் கடலில் வாழும் மற்ற உயிரினங்களுக்கு மட்டுமல்லாது, மீனவர்களுக்கும் ஆபத்தாது. அஞ்சாலை வகை மீன்களின் வாய் பெரிதாகவும், பற்கள் கூர்மையானதாகவும் இருப்பதால், இது கடித்தால் வாய்க்குள் சிக்கும் சதைப்பகுதி முழுவதையும் தனியாக எடுத்து விடும்.
தப்பித்தவறி மீனவர்கள் இதனிடம் சிக்கி கை, கால்களில் கடித்தால் எலும்பைத்தவிர சதைப்பகுதி முழுவதும் தனியாக இதன் வாய்க்குள் போய் விடும். ஆபத்து நிறைந்த அஞ்சாலை மீன்கள் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வலையில் தப்பித்தவறி சிக்கி விட்டால் மிகவும் ஜாக்கிரதையாக இதனை வலையில் இருந்து எடுத்து மீண்டும் கடலில் விட்டு விடுவார்கள்.குறைந்த ஆழம் கொண்ட கடல் பகுதியில் வாழும் அஞ்சாலை மீன்கள் சில நேரங்களில் கடல் அலையுடன் சேர்ந்து கரை ஒதுங்குவதும் உண்டு..

மனிதனின் விரல்களைப் பார்த்தால் சதையை மட்டும் உறிஞ்சி உண்டுவிடும். இதனால் கடலுக்கடியில் வருபவர்கள் இவற்றை கண்டவுடன் தலைமறைவாகிவிடுவர். இவற்றை உணவாக யாரும் உட்கொள்வதில்லை. அலங்கார மீனுக்காக மட்டும் சிலரால் பிடிக்கப்படுகிறது.