வெளிநாடு சென்ற இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்..!!

செய்திகள்

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்கள், வெளிநாடுகளில் இலங்கை நாணயத்தை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்


நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில், விமான நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் இலங்கை பணம் பரிமாற்றப்படுகின்ற போதிலும், பண பரிமாற்று முகவர்கள் இலங்கை பணத்தை மாற்ற மறுப்பு தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவிற்கு செல்லும் பயணிகளே இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அறிய கிடைக்கின்றது.இவ்வாறான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்கள், இந்தியாவிற்கு செல்லும் போது, பண பரிமாற்று நடவடிக்கைகளுக்கு சட்டவிரோதமான நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் இந்தியா செல்லும் இலங்கையர்களில் பெரும்பாலானோர் உண்டியல் முறையின் ஊடாக பண பரிமாற்றத்தை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை ரூபாவை இலங்கையில் வழங்கி, அதற்கு பெறுமதியான இந்திய ரூபாவை இந்தியாவிலுள்ள முகவர்களிடம் பெற்றுக்கொள்வதாக அறிய முடிகின்றது.