உங்கள் வாழ்க்கையின் வீழ்ச்சியை சரி செய்ய வேண்டுமா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்..!!

செய்திகள்

வாழ்க்கையும் வேகம் வேகமாக ஓடிவிடும் பிரச்சனைகள் எதுவும் பெரியதாக இருக்காது. நல்ல வேலை, நல்ல தொழில், நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், நல்ல வருமானம் என்ற வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு செல்வோம்.பிரச்சனைகள், எதிர்பாராமல் எல்லா மனிதர்களுடைய வாழ்க்கையிலும் வரும். அது எதார்த்தமான ஒன்று.


வாழ்க்கையின் வீழ்ச்சியை சரி செய்ய அற்புதம் வாய்ந்த ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.விலைமதிக்க முடியாத தங்கத்தால் கூட நம் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை போக்க முடியாது. ஆனால் இந்த ஒரு இலை போக்கிவிடும்.

வாழ்வில் விழுந்தவர்களும் இந்த பரிகாரத்தை செய்தால், கூடிய சீக்கிரம் எழலாம். வாழ்க்கையில் விழவே கூடாது என்று நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்து வாழ்க்கையை பலப்படுத்தி பாதுகாத்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.முன்னேற்றத்தில் வரும் தடையை முறியடிக்கும் பரிகாரம்.இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தப் போகும் பொருள் கற்பூரவள்ளி இலை.


பச்சை கற்பூரம் இரு சிறு துண்டு, கற்பூரவள்ளி இலை 2 மட்டுமே. இந்த இரண்டு பொருட்களை வைத்து முறையாக தடைகளை தகர்க்க பரிகாரத்தை எப்படி செய்வது.மண் அகல் விளக்கில் பெரிய அளவில் அகண்ட மண் அகல் விளக்காக எடுத்து கொள்ள வேண்டும். அதில் இரண்டு கற்பூரவள்ளி இலைகளை வைத்துவிட்டு அதன் மேலே இரண்டு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து ஏற்றி விட வேண்டும்.

கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் முன்பு தயார் செய்த இந்த மண் அகல் விளக்கை வைத்து, பச்சைக் கற்பூரத்தை ஏற்றி விடுங்கள்.அந்த நெருப்பு எரிந்து புகை வர தொடங்கும் அல்லவா. அது எரிந்து முடியும் வரை அந்த நெருப்பின் முன்பு அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி, பிரச்சினைகள் தீர வேண்டுதல் வைக்க வேண்டும்.

கற்பூரம் எரிந்து அணைந்ததும் எழுந்து சென்று விடலாம். அந்த மண் அகல் விளக்கில் இருக்கும் சாம்பலை கால்படாத இடத்தில் கொட்டி விடுங்கள். இதன் மூலம் நமக்கு என்ன நன்மை நடக்கும்.முன்னேற்றத்தில் ஏதோ ஒரு தடை, தடங்கலாக நிற்கிறது அல்லவா அந்தத் தடையை உடைக்கக்கூடிய சக்தி இந்த கற்பூரவள்ளி இலைக்கும், பச்சை கற்பூரத்திற்கும் உண்டு.


பிரபஞ்சத்திலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய நல்லதை தடுக்கக்கூடிய எந்த ஒரு கெட்ட சக்தியாக இருந்தாலும் அந்த சக்தியை சரி செய்யும் சக்தி இந்த கற்பூரவள்ளி இலைக்கு உண்டு.மகத்துவம் நிறைந்த இந்த கற்பூரவள்ளி இலையை முடிந்தால் ஒரு சிறிய தொட்டியில் வைத்து நிலை வாசல் படியில் வையுங்கள்.

வீட்டிற்குள் கண் திருஷ்டி கெட்ட சக்திகள் நுழையாமலும் இருக்கும். இந்த பரிகாரத்தை வாரம் ஒரு முறை செய்து வந்தால் வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் வீழ்ச்சி என்பது பெரியதாக இருக்காது.ஆண்கள், பெண்கள், குழந்தைகள், என்று யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.


ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக, மண் அகல் விளக்கில், 2 கற்பூரவள்ளி இலை, 2 பச்சை கற்பூரம் வைத்து நெருப்பு பற்ற வைத்து, அதன் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.