கட்டிய வீட்டை சிலரால் முழுதாக முடிக்க முடியாமல் அப்படியே பாதியில் நின்று போய் இருக்கும். இப்படிப்பட்ட வீட்டை எப்படியாவது கட்டி முடித்து அங்கு குடியேறி விட மாட்டோமா? என்றும் வேண்டி கொண்டிருப்பார்கள்.எல்லோருக்குமே சொந்த வீடு பாக்கியம் அவ்வளவு எளிதாக அமைந்து விடாது. அவரவருக்கு ஒரு கொடுப்பினை இருந்தால் தான் சொந்த வீடு அமையும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூற கேட்டிருப்போம்.

பணம் இருந்து வீடு கட்ட முடியாமல் உள்ளவர்களும் உண்டு! எல்லாமே இருந்தும் பணம் இல்லாமல் இருப்பவர்களும் உண்டு.இப்படி வீடு சார்ந்த பிரச்சனைகள் உடனே தீர்வதற்கு 48 நாட்களுக்கு தொடர்ந்து மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள்.
அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதிய செங்கல் வாங்கி பூஜை செய்ய வேண்டும்.
காசு கொடுத்து முதலில் ஐந்து புதிய செங்கல் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த செங்கல் உடையாமல், விரிசல் விழாமல் நல்ல செங்கலாக இருக்க வேண்டும்.ஐந்து செங்கற்களை வீட்டில் வைத்து நன்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து சந்தன, குங்கும பொட்டிட்டு ஐந்து செங்கற்கள் மீதும் பூக்கள் வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மகாலட்சுமிக்கு 108 முறை அர்ச்சனை செய்யுங்கள். மகாலட்சுமிக்கு நைவேத்தியம் படைக்க சக்கரை பொங்கல், புளியோதரை, லெமன் சாதம் போன்ற ஏதோ ஒன்றை உங்களால் முடிந்தவற்றை நீங்கள் வைக்கலாம்.48 நாட்கள் குங்கும அர்ச்சனையுடன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த செங்கற்களுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து பூஜையும் செய்ய வேண்டும்.
இப்படி தொடர்ந்து 48 நாட்கள் முடிவதற்குள் செய்து பூஜித்து இந்த செங்கற்களை கொண்டு மகாலட்சுமி உடைய ஆலயத்தில் வைத்துவிட்டு வாருங்கள்.இப்படி செய்வதன் மூலம் பாதியில் நின்ற கட்டுமான பணிகள் மீண்டும் நடக்கும் என்று கூறப்படுகிறது.சிலரது வீடு பாழடைந்து

போயிருக்கும் அதனை புதுப்பிக்க செய்ய முடியாமலும் இருப்பார்கள். இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் இந்த விரதத்தை மேற்கொண்டு மகாலட்சுமிக்கு பூஜை செய்து, செங்கற்கள் வழிபாடு செய்த பின்பு கொண்டு போய் ஆலயத்தில் வைத்து விட்டு வந்தால், நிச்சயம் நினைத்தது நிறைவேறும்.இந்த 48 நாட்களில் அசைவ உணவு உண்ணாமல் விரதம் இருப்பது முக்கியமாகும்.
