நடிகர் விஜய்யுடன் இலங்கை நாட்டு ஜனனி நடிப்பது பொய்யா?? வெளியான தகவல்.!

சினிமா

விஜய்க்கு மகளாக நடிக்க இருப்பதாக மறைமுறைமுகமாக ஒத்துக் கொண்டுள்ளார் பிக்பாஸ் ஜனனி.பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.


ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டது. அதன் அஸ்த்திவாராமாக மொபைல் விளம்பரத்தில் நடித்து தனது நடிப்பிற்கு ஆரம்ப புள்ளி வைத்தார்.பிறகு நடிகர் விஜய்க்கு தங்கையாக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இதன்போது அண்மையில் அவர் கொடுத்த நேர்காணல் ஒன்றில் ‘லியோ படத்தில் விஜய்யின் மகளாக நடிக்கிறீங்களா’ என கேட்ட கேள்விக்கு அதெல்லாம் ‘கம்பனி சீக்ரெட்’ என்று பதிலளித்து மூடி மறைத்துள்ளார்.அப்போது உண்மையை நீங்களே உங்கள் வாயால் உளறிவிட்டீர்கள் என்று கலாய்த்து தள்ளியிருக்கிறார் நெறியாளர்.இவ்வாறு அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
https://www.instagram.com/reel/CpHhyAxhev_/?utm_source=ig_web_copy_link