இலங்கையில் இனி தங்கம் வாங்க கடைக்கு செல்பவர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி.!!

செய்திகள்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 658,777 ரூபாவாக பதிவாகியுள்ளது.இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்ற போதிலும் கடந்த ஒரு சில நாட்களாக சிறு வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.


இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 185,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,700 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/WgN-2EEltc0