இலங்கைக்கு திடீரென கிடைக்கும் பல மில்லியன் டொலர்.!!! வெளியான மகிழ்ச்சியான செய்தி.!

செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக சர்வதேச நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனம் இந்த நிதியுதவியை வழங்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.


அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.மருந்து, உணவு மற்றும் உரம் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்று சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.