வாழ்வில் தடைகளை தகர்த்தெறியும் தேங்காய் பரிகாரம்!

செய்திகள்

எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன் முதற்கண் தெய்வமான விநாயகர் வாங்கி தான் தொடங்குவோம். அப்படியான விநாயகருக்கு ஒரே ஒரு தேங்காய் உடைப்பதன் மூலம் நம் வாழ்வில் தடைகளெல்லாம் நீங்கிவிடும்.அதாவது வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லாத மனிதர் என்று ஒருவரும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.


ஒரு சிலருக்கு பிரச்சனையே வாழ்க்கையாக இருக்கும். எதைத் தொட்டாலும் நஷ்டம், எந்த வேலை தொடங்கினாலும் பாதியிலே நின்று விடும். சிலர் பிரச்சனையை தவிர எதுவுமே இல்லாத வாழ்க்கையை தினம் தினம் கஷ்டத்துடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
அப்படியானவர்கள் இந்த தேங்காய் பரிகாரத்தை செய்தால் அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அனைத்துமே தகர்த்தெறியப்படும் என்று சொல்லப்படுகிறது.

எந்த ஒரு பூஜையிலும் தேங்காய் இல்லாமல் அந்த பூஜையானது முழுமை அடைவது கிடையாது. இந்த தேங்காயில் இருக்கும் முக்கண்களும் மும்மூர்த்திகளை குறிக்கும். அதுமட்டுமின்றி முக்கண் மூர்த்தியான சிவபெருமானின் அம்சமாகவே இந்த தேங்காயை நாம் வைத்து வழிபடுகிறோம்.


அப்படியான இந்த தேங்காயை வைத்து தான் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகளை நிவர்த்தி செய்யலாம்.பரிகாரம் செய்வதற்கு செவ்வாய்க்கிழமை காலையில் ஒரு முழு தேங்காயை வாங்கி வைத்து விடுங்கள். ஒரு நாள் முழுவதும் இந்த தேங்காய் உங்கள் வீட்டில் இருக்கட்டும் .செவ்வாய்க்கிழமை அன்று இரவு தூங்கும் போது இந்த தேங்காயை நீங்கள் படுக்கும் முன் உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

ஓம் கன் கணபதியே நமஹ இந்த மந்திரத்தை குறைந்தது 108 முறை சொல்ல வேண்டும். அதிகபட்சம் 1008 முறை கூட சொல்லலாம்.இந்த மந்திரத்தை சொல்லி உங்களின் பிரச்சினைகள் அனைத்தும் சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிய பிறகு, தேங்காய் உங்கள் அருகிலே வைத்த பின் உறங்க செல்லுங்கள்.


அடுத்த நாள் புதன்கிழமை காலையில் தூங்கி எழுந்ததும் குளித்து முடித்த பின்னர் இந்த தேங்காயை உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்கு சிதறு தேங்காயாக உடைத்து வழிபட வேண்டும்.எத்தனை நாட்கள் செய்யவேண்டும்
இந்த தேங்காய் பரிகாரத்தை இத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்ற எந்த விதிமுறையும் கிடையாது. உங்களால் முடியும் போதெல்லாம் இதை செய்து வாருங்கள்.

இதை தொடர்ந்து செய்ய செய்ய நம் வாழ்வில் உள்ள தடைகள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக விக்கினம் தீர்க்கும் அந்த விநாயகர் அருளால் அகல தொடங்கும்.இப்படி சிதறு தேங்காய் உடைத்து வழிபடும் போது நம் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.