பாம்புக்கும் உப்பினை கண்டால் பயமா?? சுவாரசியமான கதை.!!

செய்திகள்

நாங்கள்….ஊரிலிருந்தபோது வீட்டுக்குள் பாம்பு வந்து விட்டது.இரவில் கவனக் குறை வாக கதவைத் திறந்து வைத்திருந்திருக்கலாம். அதனால் அது வந்த்து. அப்படியே போக விட்டு விட்டோம்… தரையைத் தட்டித் தட்டி..எட்டி நின்று தான்… அது வெளியே போய் விட்டது. பெரிய பாம்பு நான்கடி நீளம். நல்லபாம்பு.எப்படியோ எதுவும் செய்யாமல் வீட்டுக்குள் எங்கும் புகுந்து விடாமல்..ஏதோ ers…அத்து மீறியது…அப்ப டி யே கடந்தும் சென்று விட்டது.


ஆனால் சிலர் கூறியதற்கு ஏற்ப..தோட்டத்து வாசலில் உப்பைக் கொட்டி வைத்தோம் வாராதென்று. கொஞ்ச நாள்.தான் அதுக்கப்புற மில் லை. கதவு சாத்துவதில் கவனமாயிருந் தோம்.இது பற்றி பிறகு ஓர்நாளில்..ஒரு நாட்டு வைத் தியரி டம் பேசக் கொண்டிருந்த போது இது பற்றிப் பேச்சு வந்த்து. அவர் மெல்லச் சிரித்த வாறு சொன்னார்.

தம்பி! பாம்பு மென்மையான உடல் கொண் டது. அதன் அடிப்புறம் …மிக மிக மென்மை.அதற்கு ஒரு பாடலையும் உதாரணமாக்க் காட்டினார்.கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீகிடக்க வேண்டா. — துணிவுடைய.செந்நாப் புலவன்யான் செ்ல்கின்றேன். நீயுமுந்தன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்.

என்று காஞ்சிபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாளைப் பற்றி….திருமழிசையாழ்வார் பாடிய பாடலில்…பைந் நாகப் பாய் என்பதற்கு விளக்கம் சொல்லும்போது….மென்மையான உடல் கொண்ட பாம்பு என்று விளக்கினார்…அவரே..பை என்பதற்கு மென்மை என்ற பொரு ளில் பட்டினத்தார் பாடிய


ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்று ….பையலென்ற போதே பரிந்தெடுத்து ….என்பதைச் சுட்டினார்.பையல்…மென்மையான தேகம் கொண்ட குழந்தை ….மென்மை..Soft…இங்கு பைய….என்பது போல…திருநெல்வேலி வட்டா ரத்தில்……பாத்து…..பையப் போயிட்டு வா.. என்று சொல்வதையும் எடுத்துக் காட்டினார்..

பைய மெதுவாக ஆக..பை என்றால் மென்மை..என்று விளக்கி.. பாம்பு மென்மை என்பதைக் காட்டி.. அதன் அடிப் பகுதி மேல் பகுதியைவிட மென்மையானது என்று விளக்கினார் அந்தப் பெரியவர்.அந்த மென்மையான பாம்பு க்ரிஸ்டல் போல் கூர்மை யான கல்உப்பு மேல் ஊர்ந்து சென்றால் …என்னாகும் அதன் உடல் புண்ணாகும் ம். உடல் கிழிய வும் கூடும். அதனால்… உப்பைத் தூவி வைப்பது வழக்கம் உப்பு கொட்டியிருக்குமிடத்தில் பாம்பு வாராது என்று விளக் கினார்.


ஒரு சாதாரண விஷயம் தான்…பாம்பு உப்பு. அதற்கு விளக்கம் பெறும்போது….எவ்வளவு விஷயம் வந்து கொட்டுகிறது. பெரியவர் வாயிலிருந்து.சும்மாவா சொன்னார்.வள்ளுவர்…அனுபவித் துத் தான் சொல்லியிருக்கிறார்.கற்றில னாயினும் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்றாம் துணை என்று.கேட்போம்…கேட்போம்.உப நிஷத் என்றாலே கேட்டுப் பெறுவது என்று தானே உட்பொருள்.
https://youtu.be/WgN-2EEltc0