ஒரு பெண் நம்மை விரும்புகிறாள் என்பதை எவ்வாறு கண்டறிவது? வாங்க பார்ப்போம்

செய்திகள்

இதற்கு குறிப்பாக பெண்கள் அளித்த பதிலை பார்த்தேன்! அது உங்கள் வாழ்க்கைக்கு ஒரு டிப்ஸ் ஆக வைத்துக் கொள்ளலாம்! நான் சொல்வது ஒரு ஆணாக சில டெஸ்ட் மூலம் தெரிந்து கொள்ளலாம்!நீங்கள் எந்த பெண்ணை விரும்புகிறீர்களோ அவள் கண் முன்னே வேறொரு பெண்ணை நன்றாக பார்த்து ரசியுங்கள்! புகழ்ந்து


தள்ளுங்கள்! அவள் சிரித்துக்கொண்டே கேட்டாள் என்றாள் அவள் உங்களை சுத்தமாக காதலிக்கவில்லை என்று அர்த்தம்! உங்களை இழுத்து ஒரு அறை விட்டாள் என்றால் கண்டிப்பாக உங்களை காதலிக்கிறார் என்று அர்த்தம்! உங்கள் காதலி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது என்றால் நீங்கள் என் பேச்சை கேட்டு விஷப்பரீட்சை நடத்துகிறீர்கள் என்று அர்த்தம்! கைகூடிவரும் காதலைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்! ” உன்னை நினைத்து தவறுதலாக அவளை சொல்லிவிட்டேன்!” என்று சமாளித்து மன்னிப்புக் கேளுங்கள்!

அவள் தன் தோழிகளிடம் உங்களைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்று கவனியுங்கள்! நீங்கள் பார்க்க வடிவேலு அல்லது செந்தில் மாதிரி இருந்தாலும் உங்களை அரவிந்தசாமி அஜித் குமார் என்று உங்களைப் பற்றி சொல்லிக்கொண்டு இருப்பாரேயானால் உங்களுக்கு காதலி கிடைத்து விட்டாள் என்று அர்த்தம்!

நான் சாப்பிடவில்லை என்று நீங்கள் சொல்லும்பொழுது ஓஹோ அப்படியா! என்று முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் கேட்டுக் கொள்ளும் பெண் என்றால் அவளை மறந்து விடுங்கள்! ” ஏன் சாப்பிடல இந்தாங்க முதல்ல சாப்பிடுங்க!


“என்று தன் உணவை அன்போடு கொடுத்தாள் என்றால் விரும்புகிறாள் என்று அர்த்தம்! ( ஆனால் சில சமயம் பச்சாதாபம் சகோதர பாசத்தில் கூட இது நடப்பதுண்டு அதனால் சாப்பாடு போடுவதை வைத்து அவசரப்பட்டு முடிவு கட்டி விடாதீர்கள், மற்ற எல்லா விஷயத்தையும் சேர்த்துப் பாருங்கள், குறிப்பாக உணவை அவள் உங்களுக்கு எப்படி பரிமாறுகிறாள் என்று கவனியுங்கள், அங்குதான் உள்ளது சூட்சுமம்!)

” நேற்று எனக்கு அடிபட்டுவிட்டது” என்று சாதாரணமாக சொல்லுங்கள்! எங்கே எப்போ என்று அவள் பதறினாள் கண்டிப்பாக உங்களை கண்டிப்பாக விரும்புகிறார்! நான் என்ன டாக்டரா! என்னிடம் ஏன் சொல்கிறாய்! என்று பதில் வந்தால் அவள் உங்களை விரும்பவில்லை!

(ஆனால் கோபம் வந்தால் சில சமயம் கட்டிய மனைவி கூட நமக்கு ஒரு பிரச்சனை என்றால் கண்டு கொள்ள மாட்டார்கள் , அவளை பொருத்தவரை ஒருவித தண்டனை அது! நீங்களே காயத்துக்கு மருந்து போட்டுக் கொள்ளுங்கள்)


உங்கள் போனுக்கு 40 அல்லது 50 கால்கள் அவள் தினந்தோறும் செய்தால் அவள் உங்களை வெறித்தனமாக விரும்புகிறாள் என்று அர்த்தம்!உங்கள் அம்மா அப்பா சகோதரன் சகோதரி ஏன் உங்கள் நண்பர்கள் என்று அத்தனை பேரை பற்றியும் அவர் முழுவதுமாக தெரிந்து கொள்கிறார் என்றால் அவர் உங்களை நேசிக்கிறார் என்று அர்த்தம்!

நாளை ஒருநாள் ஏதோ விசேஷம்! உங்களுக்கு போட்டுக்கொள்ள ஒரு நல்ல சட்டை கூட இல்லை! அவள் முதல் நாள் சட்டையுடன் வந்து இதை போட்டுக் கொண்டு நாளைக்கு வரவும்! என்று சொல்லுகிறார் என்றால் அவள் கௌரவம் உங்கள் மானத்தில் கலந்திருக்கிறது! உங்கள் அவமானத்தை அவள் தன்னுடைய அவமானமாக நினைக்கிறாள்! வாழ்த்துக்கள், சட்டையை மாட்டிக்கொண்டு ஜாலியாக அவருடன் கிளம்புங்கள்!

எதற்கெடுத்தாலும் உங்கள் அபிப்பிராயம் அவள் கேட்டாள் என்றால் உறுதியாக நீங்கள் நம்பலாம் உங்களை நேசிக்கிறார் என்று! உங்களிடம் பேசும்போது அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி தென்படும்! எந்த உணர்ச்சியும் இல்லை என்றால் கோபத்தில் இருக்கிறார் என்று அர்த்தம்!


எதேர்ச்சையாக அவள் கை கால் உங்கள் மேல் படுகிறது என்று நீங்கள் நினைத்தால் ஒரு சின்ன தொடுதல் கூட பெண்கள் எதேர்ச்சையாக செய்யமாட்டார்கள்! இதுதான் அவள் உங்களுக்கு கொடுக்கும் கடைசி சான்ஸ்! இதையும் புரிந்து கொள்ளவில்லை என்றால் உங்களைப்போல ஒரு முட்டாள் உலகத்திலேயே கிடையாது!
நீங்கள் எங்கு போகிறீர்கள் எங்கு வருகிறீர்கள் என்று உங்களை நன்கு கண்காணிக்கிறார் என்றால்

சந்தோஷப்படுங்கள்! அவள் நேசிக்கிறாள் என்று புரிந்து கொள்ளலாம்! மொத்தத்தில் உங்கள் சுதந்திரம் பறிபோன மாதிரி ஒரு ஃபீலிங் ஏற்பட்டால் நீங்கள் முழுக்க ஜெயித்து விட்டீர்கள்! உங்களை அவர் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார் என்று அர்த்தம்!
https://youtu.be/WgN-2EEltc0