கனடாவில் வசிக்கும் குடும்பம் ஒன்று தங்களது உறவினர்களினை பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.ஒரு மாதங்களின் பின் தங்கள்து நாட்டுக்கு மீண்டும் செல்வதற்காக ஒரு வான் ஒன்றின் மூலம் திங்கட்கிழமை(22.02.2023) காலை 10 மணிக்கு யாழிலிருந்து புறப்பட்டு விமான நிலையத்துக்கு மறு நாள்

அதிகாலை 12மணிக்கு(23.02.2023) விமானநிலையத்தில் நிற்க வேண்டுமென்பதனால் அதிக நேரம் இருப்பதனால் இரவுப்போசனத்தை கொழும்பிலுள்ள வெள்ளவத்தையில் உள்ள ஓர் உறவினர் வீட்டில் உண்பதற்காக பிற்பகல் 4 மணிக்கு வருகை தந்துள்ளனர்.வருகை தந்த அனைவரும் கடவுச்சீட்டு மற்றும் டிக்கெட் உள்ள சிறு பையினை
மட்டும் தங்கள்து உறவினர் வீட்டுக்கு எடுத்து சென்று மிகுதி அனைத்து லட்கேசுகளும் வாகனத்தில் வைத்து விட்டு செல்லும் போது வாகன சாரதி அருகில் உள்ள சலூன் கடையில் தலைமயிர் வெட்டி விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெட்டி முடிந்த பின் வீதியின் இடைநடுவில் வாகனத்தினை நிறுத்திவிட்டு தொலைபேசியினை Silentல் போட்டுவிட்டு நல்ல நித்திரை.!

வானில் வருகை தந்த பயணிகள் சாரதியினை வருகைதரதாதைபடுத்து தொலைபேசிமூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொடர்புகொள்ள முடியாததையடுத்து லட்கேட்சினை விட்டுவிட்டு வேறு வாகனத்தில் விமான நிலையத்தில் சென்றுள்ளனர். வாகன சாரதி சிறிது நேரத்தின் பின் எழும்பி பார்த்த போது
அதிகாலை(23.02.2023) 4 மணி.. என்னசெய்வதென்று தெரியாமல் பயணிகளினை இறக்கிவிட்ட வீட்டுக்கு சென்று நடந்ததை கூறி மன்னிப்பு குறிவிட்டு அனைத்து பாசலினையும் 150,000ரூபா கொடுத்து தனது சொந்தபணத்தில் பொதி அனுப்பும் நிறுவனத்தின் மூலம் உரியவர்களுக்கு அனுப்பியுள்ளார்.lkinfo
