வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு மிகவும் அருமையான வாய்ப்பு..!!

செய்திகள்

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையானது 2023 ஆம் ஆண்டு முதலாம் அரையாண்டிற்கான முழு நேர கற்கைநெறிகளை ஏப்ரல் மூன்றாம் திகதி கீழ்வரும் பயிற்சி நிலையங்களில் ஆரம்பிக்கவுள்ளது.1.கைதடி தொழிற் பயிற்சி நிலையம். 2.காரைநகர் கைதடி தொழிற் பயிற்சி நிலையம் 3.பண்டத்தரிப்பு தொழிற் பயிற்சி நிலையம் என்பனவே அவையாகும்.


காய்ச்சி இணைப்பவர், தொழிற்சாலை மின்னிணைப்பாளர், மரவேலை தொழில்நுட்பவியலாளர், வளிச்சீராக்கி குளிர்சாதன திருத்துனர், மற்றும் அழகு கலை போன்ற கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.இந்த கற்கைநெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை {NVQ} சான்றிதலுக்கான பயிற்சி நெறிகளாகும்.

கற்க விரும்புவோர் தங்கள் பதிவுகளை எதிர்வரும் 15.03.2023 ற்கு முன்னதாக மாவட்ட அலுவலகம் 4ஆம் மாடி வீரசிங்கம் மண்டபம், இல 12 கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம் அல்லது பிரதேச தொழிற் பயிற்சி நிலையங்களிலும் மேற்கொள்ள முடியும்.

விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள 0212227949, 0212211793, 0212057047 மற்றும் 0777161955 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது