வீதியில் கிடந்த சுமார் 5 லட்சம் ரூபா பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞன்!! குவியும் வாழ்த்துக்கள்..!!

செய்திகள்

வீதியில் கண்டெடுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர்.காணாமல் போன 5 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டு மீண்டும் பொலிஸார் முன்னிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, அம்பாறை – கல்முனை அரச வங்கி ஒன்றிற்கு நேற்று 35 இலட்சம் ரூபா பணத்தை வியாபார நடவடிக்கைக்காக வைப்பிலிடுவதற்கு வர்த்தகர் ஒருவர் சென்றிருக்கின்றார்.வங்கிக்குள் சென்று குறித்த தொகையை வைப்பிலிடுவதற்கு தயாரான நிலையில் தான் கொண்டு வந்திருந்த

பணத்தொகையில் ரூபா 5 இலட்சம் காணாமல் சென்றுள்ளதை அறிந்துள்ளார்.இந்நிலையில் உரிய வங்கி மேலாளருக்கு அறிவித்து விட்டு வங்கியின் அருகில் இருந்த சிசிடிவி காணொளிகளை அவதானித்துள்ளார். காணொளியில் தவறவிடப்பட்ட பணத்தை ஒருவர் எடுத்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.


இன்று (21) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றினை வழங்குவதற்காக பணத்தை தவறவிடப்பட்ட வர்த்தகர் சென்றார். அதே நேரம் பொலிஸ் நிலையத்திற்கு பணத்தொகையை எடுத்து சென்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த இளைஞனும் பொலிஸாரிடம் அதனை ஒப்படைப்பதற்கு சென்றுள்ளார்.

பணத்தை தவறவிட்டவர் பொலிஸார் முன்னிலையில் மீண்டும் தனது பணத்தை பெற்றுக்கொண்டதுடன் இளைஞனை ஆரத்தழுவி தனது நன்றிகளை தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் அன்றாட செலவுகளுக்கே திணறிவரும் நிலையில் பணத்தை மீளக்கொடுத்த இளைஞனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.