இலங்கை வாகன சாரதிகளுக்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில் வெளியான அதிர்ச்சி செய்தி..!!

செய்திகள்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் சுமார் ஆயிரம் மெற்றிக் தொன் தரமற்ற எரிபொருள் உள்ளதாக எண்ணெய் துறைமுக மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கையில்


தரக்குறைவான பெட்ரோல் உற்பத்தி செய்யப்படவில்லை என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட போது தேவையான ஒக்டேன் பெறுமதி இல்லாத பெட்ரோலை உற்பத்தி செய்ததாக அவர் கூறினார்.

கடந்த காலங்களில் தரமற்ற மசகு எண்ணெய் சுத்திகரிப்பு காரணமாக தரம் குறைந்த பெட்ரோல் இருப்புகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இந்த பெட்ரோல் இருப்புகளின் ஒக்டேன் பெறுமதி 80 முதல் 90 வரை உள்ளதாகவும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.