யாழில் மிகவும் தரமான முறையில் மிக்க குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்படும் செருப்புக்கள்..!! குவியும் பாராட்டுக்கள்.!!

செய்திகள்

யாழ்ப்பாணத்துச் செருப்பு.பார்ப்பதற்கு அழகானதும், தரமானதுமான செருப்புக்கள் யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகின்றன என்றால், நீங்கள் நம்புவீர்களா? ‘அந்திரான்’ என்று ஒரு யாழ்ப்பாணத்துச் சிறு கிராமம்.


அங்குதான் இந்த செருப்புத் தொழிற்சாலை இருக்கிறது. கொழும்பில் இருந்து மூலப்பொருட்களை எடுப்பித்து, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் ஏற்ற, அழகிய செருப்புக்களை இங்கே உற்பத்தி செய்கிறார்கள்.

பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட ஐந்து பெண்கள் இங்கே வேலை செய்கிறார்கள். செருப்புக்களில் போடப்படும் அழகிய வேலைப்பாடுகளை வடிவமைப்பது, அவற்றை அச்சுப் பதிப்பது, பொதிசெய்வது எல்லாமே இவர்கள்தான்.

பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கிறது இவர்களின் உழைப்பு. இவர்களின் இந்தத் தொழில் மேலும் பெருகுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. இனிமேல் உங்கள் பாதங்களை இந்த யாழ்ப்பாணத்துச் செருப்புக்கள் அலங்கரிக்கட்டும்.

‘arp’ எனும் பெயரில் உருவாகிவரும் ‘அந்திரான் தோற்பொருள் உற்பத்தி கூட்டுறவுச் சங்கத்தின்’ செருப்புக்களை வாங்கி அணியுங்கள். உங்கள் சகோதரிகளின் வாழ்வில் ஒளியேற்றுங்கள்..!!