யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் விக்னேஸ்வரன் காலமானார்..!! ஆழ்ந்த இரங்கல்.!

செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரன் காலமாகியுள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் இன்றையதினம் (17.02.2023) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


யாழ். பல்கலைக்கழக மாணவர்களுள் ஒருவர் அப் பல்கலைக்கழகத்தின் துணேவேந்தரானார் எனும் வரலாற்றை முதலில் பதித்தவர் பேராசிரியர் விக்னேஸ்வரன்.இவர் கிழக்கு மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில் கணிதத்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.

துணைவேந்தர் காலப்பகுதியில் மட்டுமல்ல தனது பல்கலைக்கழக தொழில் வாழ்வு காலங்களில் குறிப்பிடத்தக்க தமிழ்த் தேசியக் காரியங்களை அவர் ஆற்றியவர்.யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீடாதிபதியாகவும் அவர் பதவி வகித்தவர். கடும் உழைப்பு மற்றும் குடும்ப வறுமையைத் தாண்டி முன்னேற முடியும் என மெய்ப்பித்த பெருமனிதரான பேராசிரியர் விக்னேஸ்வரன் இன்று மாரடைப்பால் காலமானார்.