வரும் 20ம் திகதி இலங்கையில் ஏற்படப்போகும் மாபெரும் போராட்டம் தொடர்பில் வெளியான செய்தி.!

செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பை ஐக்கிய மக்கள் சக்தி முற்றுகையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடப்படுவது பணப்பற்றாக்குறையினால் அல்ல, நாட்டை ஆளும் ஜனாதிபதிக்கோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கோ மக்கள் இல்லாத காரணத்தினாலேயாகும்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எந்த வகையிலாவது நிறுத்துவதற்கு நாட்டின் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனினும் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் வரை ஐக்கிய மக்கள் ச்கதி போராடும் என குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்புஎதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஒத்திவைத்துள்ளது.இதனையடுத்து இன்று காலை இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி பெருந்தொகையான மக்களுடன் கொழும்பிற்கு வந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.