இந்த 5 ராசிக்காரங்க மத்தவங்க ஏமாத்துறதுகூட தெரியாத முட்டாளா இருப்பாங்களாம்..!!

செய்திகள்

இவ்வுலகில் எல்லா மாதிரியான மக்களும் இருக்கிறார்கள். சிலர் மிகுந்த புத்திசாலியாக இருப்பார்கள், இன்னும் சிலர் அடிமுட்டாள்களாக இருப்பார்கள். சிலர் தாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அப்பாவியாக இருக்கிறார்கள். அவர்களால் உண்மையில் நல்லவர் கெட்டவர் என்று மக்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது.


இதனால், இவர்கள் எல்லாரையும் நல்லவர்கள் என நம்பி ஏமார்ந்துகொண்டிருப்பார்கள். இவர்கள் குழந்தை போன்றவர்கள், அப்பாவிகள் மற்றும் தூய்மையான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார்கள். மாறாக, ஒவ்வொரு நபரையும் சூழ்நிலையையும் எப்போதும் நேர்மறையான வழியில் வைத்தே சிந்திக்கிறார்கள். மற்றவர்களை குறைக்கூற மாட்டார்கள்.

அவர்கள் எவ்வளவு நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருந்தாலும், மக்கள் எப்போதும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு பொய்யிலும் வஞ்சகத்திலும் சிக்க வைத்து விடுவார்கள். இவர்களும் எளிதில் ஏமார்ந்து அந்த வலையில் சிக்கிகொள்ளவர்கள். எனவே, எளிதில் ஏமாறக்கூடிய முட்டாளாக இருக்கும் ராசிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் ஒரு குழந்தையைப் போல அப்பாவிகளாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் நேர்மறையானவர்கள் மற்றும் நல்லவர்கள் என நினைக்கிறார்கள். அதனால், இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றப்படுவதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. மற்றவர்களிடம் உள்ள நல்லதைத் தேடுவதில் அவர்கள் மிகவும் பிஸியாக இருப்பதால், அவர்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட கொடூரமான திட்டங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. யார் என்ன சொன்னாலும் செய்தாலும் அவர்களை நல்லவர்கள் என்று நம்பும் முட்டாளக இந்த ராசிக்காரர்கள் இருப்பார்கள்.


கடகம்கடக ராசிக்காரர்கள் இனிமையானவர்களாகவும் மற்றும் உணர்திறன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும், அவர்கள் மிகவும் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருப்பதால், காயப்படுவதை அவர்களால் தாங்க முடியாது. இந்த ராசிக்காரர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால், மற்றவர்கள் பெரும்பாலும் அவர்களைத் தாழ்வாகவே கருதுகிறார்கள். ஆனால், அவர்கள் மிகவும் தூய்மையான குணங்களைக் கொண்டுள்ளனர். மக்கள் மற்றவர்களை காயப்படுத்துவதை கூட, அவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆதலால், இந்த ராசிக்காரர்கள் எல்லாராலும் ஈஸியாக ஏமாற்றப்படும் முட்டாளாக இருப்பார்கள்.

சிம்மம்சிம்ம ராசிக்காரர்களை எவ்வளவு காயப்படுத்தியிருந்தாலும், அங்குள்ள மக்கள் உண்மையில் அவர்களை காயப்படுத்த விரும்புகிறார்கள் என்று அவர்களால் நம்ப முடியாது. இந்த ராசிக்காரர்கள் மிகவும் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். அவர்கள் நேர்மையாக சிந்தனையையும் எண்ணங்களையும் கொண்டுள்ளனர், மற்றவர்களும் அவர்களை போல இருப்பதாக நம்புகிறார்கள். மக்களை மிக எளிதாக நம்புவதால் அவர்கள் எளிதில் ஏமாற்றப்படும் முட்டாளாக இருக்கிறார்கள்.


மகரம்மகர ராசிக்காரர்கள் மக்களை விரைவாக நம்புகிறார்கள். ஏனென்றால் அவர்களைப் போலவே, அனைவருக்கும் உயர்ந்த நெறிமுறைகள், ஒழுக்கங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளன என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள் மற்றும் வெளிப்படையானவர்கள் மற்றும் தங்களைப் பற்றிய சிறந்த பதிப்பாக இருப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். அதனால், மற்றவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கும்பம்படைப்பாற்றல், கற்பனை மற்றும் கற்பனையின் சொந்த உலகில் கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் தொலைந்து போகிறார்கள். அவர்கள் எல்லா மக்களின் மீதும் நல்ல மதிப்பைக் கொண்டுள்ளனர். மக்களின் உண்மையான நோக்கங்களை அவர்கள் உணர மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் அப்பாவிகள் என்பதால் மக்கள் அவர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.

இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள்ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். அவர்கள் யாரையும் விரைவாக நம்ப மாட்டார்கள் மற்றும் மக்களுடன் தொடர்பில் இருக்கும்போது மிகவும் கவனமாக இருப்பார்கள். அவர்கள் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருப்பதால் எளிதில் வலையில் சிக்க மாட்டார்கள்.