‘காதலிக்க வேண்டுமா இல்லையா’ என்ற உங்கள் போராட்டத்தை முடித்து உங்களுக்கான ஒரு பெண்ணை கண்டறிந்தால் அதற்குப்பின், ‘அவர் உங்களை காதலிக்கிறாரா இல்லையா’ என்ற மற்றொரு இக்கட்டான நிலையை அடைவீர்கள். நீண்ட கால உறவில் இருக்கும் ஆண்களுக்கும் இது பொருந்தும். காதல் நாம் அனைவரும் அறிந்தபடி, ஆற்றல் நிறைந்தது மற்றும் ஒரு நபர் காதலில் இருந்து வெளியேறுவது எப்போதும் அசாதாரணமானது அல்ல.

இரண்டு பேர் உண்மையாக காதலிக்கும்போது, எதுவும் தவறாக நடக்காது என்று நாம் கருதுகிறோம். எனவே ஒருவர் உண்மையாகவே இன்னொருவரைக் காதலிக்கும்போது, சில அறிகுறிகள் இருக்கும். அவர்கள் நடந்துகொள்ளும் விதம் அல்லது தங்கள் துணைக்காக அவர்கள் செய்யும் விஷயங்கள் அவர்களின் காதலை வெளிப்படுத்தும். பெண்கள் உண்மையிலேயே காதலிக்கும்போது அவர்கள் என்னென்ன செய்வார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு பெண் உங்களை உண்மையாக காதலிக்கும் போது நீங்கள் எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் அவர்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ள பயப்பட வேண்டாம் மற்றும் அவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்சம் வேண்டாம். உங்கள் மோசமான பயம் முதல் உங்களின் பாதுகாப்பின்மை வரை அனைத்தையும் அவர் அறிந்திருந்தாலும், அவர்கள் உங்களை நேசிப்பார்கள்.

நீங்கள் உங்கள் பெற்றோருடன் அல்லது நண்பர்களுடன் சண்டையிட்டு, அனைவரிடமிருந்தும் உங்களை விலக்கிக் கொள்ள விரும்பும் போது, அவர் உங்கள் எல்லா பிரச்சனைகளையும் கேட்பார்கள், ஆனால் அதே நேரத்தில் உங்கள் தவறுகளை உணர வைப்பார்கள். அவர்கள் உங்கள் தோழி மற்றும் வழிகாட்டியாக இருப்பார். உங்களுக்கு அறிவுரை தேவைப்படும்போது நீங்கள் முதலில் தேடுவது அவர்களாகத்தான் இருக்கும்.
சண்டையிடாத காதலர்களை நீங்கள் எப்போதும் பார்க்கமுடியாது. ஏனெனில் சண்டையும், வாக்குவாதங்களும் ஆரோக்கியமான உறவின் ஒரு பகுதியாகும். ஒரு பெண் தன் துணையை உண்மையாக காதலிக்கும்போது, அவர்கள் உறவில் ஏற்படும் வாக்குவாதங்களை தீர்க்கவே முயற்சிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சண்டைகள் அல்லது வாக்குவாதங்கள் அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு வழியாகும். உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க சண்டைகளை அவர்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்துவதில்லை.
ஒவ்வொரு மனிதர்களும் வித்தியாசமானவர்கள், அதுவே அவர்களை தனித்துவமானவர்களாக மாற்றுகிறது. உங்களை உண்மையாக நேசிக்கும் ஒரு பெண் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் குறைபாடுகள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் யாரும் சரியானவர்கள் அல்ல. உங்களுக்கு வேலை இருக்கிறதா இல்லையா, நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்களா அல்லது குண்டாக இருக்கிறீர்களா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் உங்களையும், உங்கள் குறைபாடுகளையும் காதலிக்கிறார்கள், எதற்காகவும்உங்களை மாற்ற முயற்சிக்க மாட்டார்கள்.

ஒரு பெண் தங்கள் துணையை உண்மையாக காதலிக்கும்போது, அவர்கள் நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் கவலைப்படாமல், அழகான எதிர்காலத்திற்காகவும் திட்டமிடுவார்கள். ஒன்றாக ஒரு வீட்டை சொந்தமாக்குவது அல்லது குழந்தைகளைப் பெறுவது பற்றிய ஒரு சீரற்ற உரையாடலாக இருந்தாலும், அவர்களின் எல்லா திட்டங்களிலும் அவள் உங்களைச் சேர்த்துக்கொள்வார்கள்.
முக்கியமான தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சிக்கல்களுக்கு உங்கள் ஆலோசனையைப் பெறுவது அவரது வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தும் வழியாகும். இது அவர்கள் உங்களை ஒரு சிறந்த துணையாக கருதுகிறார் என்பதற்கான அறிகுறியாகும். உண்மையாக காதலிக்கும் போது உங்கள் கருத்து அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.