ஒரு அரச உத்தியோகத்தரின் பதிவு இது,#யாரோடு_நோவோம்.ஜனவரி மாத அரசாங்க சம்பளம்.மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச ஊழியரான நான்…. “முப்பத்தைய்யாயிரம் ரூபாவில் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

மின்சார நெருப்புக் கட்டணம்,குடிநீர் வெறுப்புக் கட்டணம்,தொலைபேசி சொல்லாமல் கூட்டும் கட்டணம் ,எரிவாயு சொல்லிக் கூட்டும் கட்டணம்.எரிபொருள் வயிரெரிந்து கொடுக்கும் கட்டணம்.#npteachers போக்குவரத்துக்கு வரவில்லாமல் செலவு கட்டணம்.
இதைவிட தலையிடி.காய்ச்சல்.இன்னும் என்னெல்லாமோ கட்டணம்.அரை கொத்து அரிசியில் அஞ்சுபேர்.வயிறு நிரம்பணும்.நாளைக்கு சாப்பிட ஆயிரம் ரூபாயும் காணாது.நண்பனிடம் வாங்கணும் கடன்.சின்னப் பிள்ளைகள் ரெண்டு இருந்தால் என்னத்தைச் சொல்லுறது ??வயிற்றை விற்றுச்சரி பால்ப்போத்தல் வாங்கலாம்.பால் மா.?

கல்யாண வீடு,பிறந்தநாள் வீடு,அலுவலக தண்டச் செலவு வேற நோன்பு வேற வருகுது செத்த கதை தான் மொத்தப் பேருக்கும்.சீ ….ஏன் இந்த வாழ்க்கை என்று மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் நான் …. யாரை நோவது? யார்க்கொடுத்துரைப்பது?பிரதி செய்யப்பட்டது.