இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள்..!! ஆனால் இவர்களுக்கு மட்டுமே விநியோகம்.!

செய்திகள்

நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாட்டு அதிகரித்துள்ள நிலையில் தற்காலிகமாக முட்டை இறக்குமதிக்கு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தை விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளது.


இறக்குமதி செய்யப்படும் முட்டைகள், வெதுப்பக துறையினருக்கு மாத்திரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது நுகர்வுக்காக, வர்த்தக நிலையங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டையை விநியோகிக்க அனுமதி வழங்கப்படக் கூடாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.