உங்க முன்னாள் காதலன்/காதலி கனவில் தோன்றுகிறார்களா? அப்படினா இதுதானாம் அர்த்தமாம்.!!

செய்திகள்

கனவுகள் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பவை. நம்முடைய கனவுகளுக்கும், நம்முடைய வாழ்க்கைக்கும் எப்போதும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும். சில சமயங்களில் நாம் இதுவரை வாழ்க்கையில் எப்போதும் பார்த்திராத நபர்களைப் பற்றி கனவு காண்கிறோம் அல்லது ஒவ்வொரு நாளும் ஒரே நபரைப் பற்றி மீண்டும் மீண்டும் கனவு காண்கிறோம்.


சில கனவுகள் நாம் மறக்க நினைக்கும் விஷயங்களை மீண்டும் நியாபகப்படுத்தும் விதத்தில் இருக்கும்,குறிப்பாக நாம் மறக்க நினைக்கும் முன்னாள் காதலர்களை அடிக்கடி நாம் கனவில் பார்க்கலாம். இந்த கனவுகள் நமக்கேத் தெரியாமல் நம் ஆழ் மனதில் இருந்து உருவாகலாம் ஆனால் சில கோட்பாடுகள் தேவதைகள் நம் முன்னாள் துணை மூலம் நம்மை தொடர்பு கொள்வதாக கூறுகிறது. சமீப காலமாக உங்கள் முன்னாள் துணையை நீங்கள் தொடர்ந்து கனவில் பார்த்தால் கொண்டிருந்தால், அதற்குப் பின்னால் சில சுவாரஸ்யமான காரணங்கள் இருக்கலாம்.

உறவு ஒரு கசப்பான குறிப்பில் முடிவடைந்தால் அல்லது அந்த நபர் இன்னும் தனது முன்னாள் துணையுடன் உணர்வுகளை வைத்திருந்தால், அது உங்கள் கனவில் வெளிப்படும். உங்கள் முன்னாள் காதலன்/காதலி உங்கள் கனவில் தோன்றினால் பயப்பட வேண்டாம். கனவு காண்பதை நிறுத்தும் வகையில் அவர்களை மறப்பதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.


உறவு தொடர்பான உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளை செயல்படுத்த மூளைக்கு கனவுகள் ஒரு வழியாகும். இது மிகவும் இயற்கையானது மற்றும் இதைக்குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. அந்தக் கனவுகளை விட்டு ஓடிவிடாமல், அவை தரும் செய்தியை எதிர்கொண்டு அதை பயனுள்ளதாக செயல்படுத்துங்கள்.

ஒருவரின் வாழ்க்கையில் மன அழுத்தம் அல்லது பதட்டத்தால் கனவுகள் தூண்டப்படலாம், மேலும் உங்கள் முன்னாள் காதலன்/காதலி அந்த உணர்வுகளின் அடையாளமாக இருக்கலாம். கடந்த காலங்களில் உங்களுக்கு இந்த உணர்வுகள் ஏற்பட அவர்கள் காரணமாக இருந்திருந்தால் மீண்டும் அந்த உணர்வுகள் எழும்போது அவர்கள் உங்கள் கனவில் தோன்றுவது இயற்கையானதுதான்.

நீங்கள் உங்கள் கடந்த கால உறவிலிருந்து நீங்கள் ஒரு முற்றுப்புள்ளியைப் பெறவில்லை என்றால், அவர்கள் உங்கள் கனவில் அடிக்கடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்களின் இந்த கனவுகள் அதன் முடிவுக்கு வருவதற்கான ஒரு வழியாக இருக்கலாம்.


உங்கள் முன்னாள் காதலன்/காதலி குறிப்பிட்ட நினைவுகள், இடங்கள் அல்லது செயல்பாடுகளுடன் தொடர்புடையவராக இருக்கலாம். நீங்கள் மீண்டும் அந்த இடம் அல்லது செயல்பாட்டை செய்யும் போது, அது அவர்களைப் பற்றிய கனவுகளைத் தூண்டும்.

உங்கள் முன்னாள் துணை கனவில் வருவது நீங்கள் இழந்த சுயத்தை மீண்டும் அடைவதற்கான தருணம் இதுவென்பதை உணர்த்தலாம். உங்கள் கடந்த கால உறவில் நீங்கள் நிறைய விட்டுக்கொடுத்திருக்கலாம், அதனால் உங்கள் சுயத்தில் பெரும்பாலானவற்றை இழந்திருக்கலாம். தற்போதுமீண்டும் உங்கள் முன்னாள் துணை கனவில் வருவது நீங்கள் அடுத்த வாழ்க்கைக்கு தயராக வேண்டியதன் அறிகுறியாக இருக்கலாம்.

கனவுகள் குறியீடானவை மற்றும் எப்போதும் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளுடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த கனவுகள் உங்களை தொடர்ந்து தொந்தரவு செய்தால் ஒரு சிகிச்சையாளர் அல்லது ஆலோசகரிடம் பேசுவது உதவியாக இருக்கும்.