வழுக்கை தலையால் அடித்த அதிஷ்டம்..!! குவியும் வாழ்த்துக்கள்.!

செய்திகள்

வழுக்கை தலையால் வேலை இழந்த நபருக்கு நீதிமன்றம் அளத்த உத்தரவால் சுமார் ரூ.71 இலட்சம் கிடைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள டேங்கோ நெட்வேர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்


வழுக்கை தலையுடன் இருக்கும் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு இனி வேலை கிடையாது என்று தெரிவித்து முகாமையாளர் அவர்களை வலுக்கட்டாயமாக பணிநீக்கம் செய்துள்ளார்.இவ்வாறு பாதிக்கப்பட்ட 61 வயதுடைய மார்க் ஜோன்ஸ் என்ற நபர் லீட்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலையில் முடி நிறைந்திருந்த போதிலும், தான் தவறாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதுபற்றி முகாமையாளர் பிலிப் ஹெஸ்கெத் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், நானும் வழுக்கை தலையுடன் இருப்பதால் அலுவலகத்தில் உள்ளவர்களும் அது போன்று இருப்பதை நான் விரும்பவில்லை என்றும் ஆற்றல் மிகுந்த


இளமையான நபர்கள் இருந்தால் தான் வேலைகள் விரைவாகவும் தெளிவாகவும் நடக்கும் என்று கூறினார்.இதனை ஏற்கமறுத்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்டஈடாக 71,441 பவுண்டுகள் (ரூ71 .இலட்சம்) வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.