நாய்க்கறியில் விஷமெல்லாம் கிடையாது. நாகாலாந்தில் நாய்க்கறி, பிரதான உணவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், பெரும்பாலானவர்கள் நாய்க்கறியை உட்கொள்ளாமலிருப்பதற்குப் பல கார

நமது முன்னோர்கள், உண்ணக்கூடிய கறிவகைகளுள் ஒன்றாக, நாய்க்கறியைக் கருதாமல் விலக்கிவிட்டனர். இதனால், காலகாலமாக, பாரம்பரிய மரபுரீதியாக, அவர்களுடைய வழிமுறையைப் பின்பற்றி, நாமும் நாய்க்கறி உட்கொள்ளாமல் தவிர்த்து வருகிறோம்.
நாயினுடைய நன்றியுணர்வு, பாச உணர்வு, காவல்பணி ஆகியவை, நம்மனதில், சென்டிமென்ட் டச் ஆக, பல ஆண்டுகளாகப் பதிந்துபோயுள்ளதால், அதைக் கொன்று கறிசமைக்க, நமக்கு மனம்வருவதில்லை.நாயினுடைய வெறிபிடிக்கும் தன்மை, காரணமாக, அருவறுப்பும், பயமும் ஏற்பட்டு, பலரும் நாய்க்கறி உண்ண விரும்புவதில்லை.

நாயானது, கெட்டுப்போன இதர விலங்குகளின் கறிகளையும் உண்கிறது. சில சமயங்களில் சாக்கடைகளிலும் உலவுகிறது. இதனால், நாயின் மீது அருவறுப்பும், பயமும் ஏற்பட்டு, அதை கறிசமைத்துண்ண நமக்கு மனம் வருவதில்லை.