மகா சிவராத்திரியில் இருந்து இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் ஆரம்பிக்க போகுதாம்..!!

செய்திகள்

இந்துக்களால் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு தினம் தான் மகா சிவராத்திரி. இந்த மகா சிவராத்திரியானது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியில் கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான நாளில் சிவபெருமானின் அருளைப் பெற பக்தர்கள் விரதமிருந்து, பல்வேறு பொருட்களால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளை செய்வார்கள். மேலும் இந்த மகா சிவராத்திரி நாளில் சிவனின் ஆசியைப் பெற பக்தர்கள் உறங்காமல் சிவனை நினைத்து மனமுருக வேண்டுவார்கள்.


இப்படிப்பட்ட மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி நாளில் கிரகங்களின் நிலைகளால் 12 ராசிகளிலும் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் 2023 மகா சிவராத்திரி நாளில் இருந்து 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் மற்றும் சிவனின் அருளைப் பெற எந்த பொருட்களால் சிவனை வழிபட வேண்டும் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி நாளில் இருந்து நற்பலன்கள் கிடைக்கவுள்ளது. இதுவரை நிதி பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த சிவராத்திரிக்கு பின் அது முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவலிங்கத்திற்கு சந்தன அபிஷேகம் செய்ய இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மகா சிவராத்திரி நல்ல பலன்களை வழங்கும். அதில் சிலர் நற்செய்திகளையும், சிலர் பெரிய லாபத்தைப் பெறலாம். ஒருவேளை நீங்கள் நீண்ட காலமாக ஏதாவது நடக்க வேண்டுமென்று நினைத்தால், அது இந்நாளில் வெற்றிகரமாக நடக்கும். ரிஷப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் மல்லிகை பூக்களை சிவபெருமானுக்கு படைத்து வணங்குவது நல்லது.


மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி நாளில் சிவனின் ஆசி கிடைக்கும். அதுவும் பணிபுரிபவர்களாக இருந்தால், அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் கிடைக்கும். இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்க மகா சிவராத்திரி நாளில் சிவப்பு சந்தனத்தை வாங்கி கொடுத்து வழிபடுங்கள்.

கடகம்கடக ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் வெள்ளை நிற பூக்களை படைத்து வழிபட வேண்டும். இதனால் அஷ்டம சனியின் தாக்கத்தால் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.

சிம்மம்சிம்ம ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் கலவையான பலன்களைப் பெறுவார்கள். ஒருவேளை நீங்கள் இதுவரை ஒருவித மன அழுத்தத்தில் இருந்தால், இந்த மகா சிவராத்திரியில் இருந்து சற்று மன நிம்மதியை அடைவீர்கள். ஆனால் இந்நாளில் சிவபெருமானை வழிபட மறந்துவிடாதீர்கள்.


கன்னிகன்னி ராசிக்காரர்கள் மகா சிவராத்திரியில் இருந்து பண பிரச்சனைகளை சந்திக்கமாட்டார்கள். சிவனின் அருளால் பணம் சம்பாதிக்க பல்வேறு வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் செம்பருத்தி பூக்களை சிவனுக்கு அர்ப்பணித்து வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

துலாம்துலாம் ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது பிரச்சனையை அதிகரிக்கும். மகா சிவராத்திரி நாளில் சிவனின் அருளைப் பெற சிவலிங்கத்திற்கு நீரால் அபிஷேகம் செய்யுங்கள்.

விருச்சிகம்மகா சிவராத்திரியானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். இந்நாளில் இருந்து இந்த ராசிக்காரர்கள் கடன்கள் அனைத்தும் தீரும் மற்றும் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நற்பலனைப் பெற மகா சிவராத்திரி நாளில் ஊமத்தம் பூவை சிவனுக்கு அர்ப்பணித்து வழிபட வேண்டும்.


தனுசுதனுசு ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்வதோடு, நல்ல தெளிவைப் பெறுவார்கள். வாழ்வில் நல்ல விஷயங்களை ஆதரித்தால், நல்லது நடக்கும் என்பதை புரிந்து கொள்வீர்கள். இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவ சாலிசாவை பாராணம் செய்வது நல்லது.

மகரம்மகர ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரியானது மங்ளகரமாக இருக்கும். சிலர் இந்நாளில் நல்ல செய்தியைப் பெறலாம். சிலர் நீண்ட நாட்களுக்கு பின் பயணத்தை மேற்கொள்ளலாம். இந்நாளில் இந்த ராசிக்காரர்கள் எள்ளு விதைகளை சிவனுக்கு படைப்பது நல்லது.

கும்பம்கும்ப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் யாரையும காயப்படுத்தாமல் இருக்க வெண்டும். மற்றவர்களுடன் நல்ல எண்ணத்துடன் இருக்க முயற்சிக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் தேனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது நல்லது.


மீனம்மீன ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் தங்களின் உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்நாளில் மதிப்புமிக்க பொருட்களை இழக்க வாய்ப்புள்து. பேராசையைக் கட்டுப்படுத்த வேண்டும். சிவனின் அருளைப் பெற இந்த ராசிக்காரர்கள் நெய்யை சிவனுக்கு படைத்து வழிபட வேண்டும்.