வெளிநாடு செல்ல ஆசைப்படுபவர்கள் ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்..!! அருமையான விளக்கம்.!

செய்திகள்

வெளிநாடு வந்தவர்கள் தனக்காக எப்போ வாழப் போகிறார்கள், புலம் வந்ததும் முதலில் விசா கிடைத்தால் போதும் என்றார்கள்.பின் வேலை கிடைத்தால் போதும் என்றார்கள்.எங்கேயாவது ஒட்டிக் கொண்டு இருக்க வீடு கிடைத்தால் போதும் என்றார்கள்..


கார் ஒன்று இருந்தால் போதும் என்றார்கள்.பின் மீண்டும் தொடங்கினார்கள்.சொந்த வீடு வாங்கினால் போதும் என்று விலை கூடின கார் ஒன்று வாங்கினால் போதும் என்றார்கள்.குடியுரிமை முக்கியம் என்று
எடுத்தார்கள்..இப்போ எல்லாம் போய் எப்படியாவது ஒரு கடை ஒன்று போட்டால் போதும் என்று ஒரே ஓட்டம் ஓட்டம்.

இதோட முடிஞ்சுதா.ஊரில் ஒரு கல்வீடு கட்டனோம் எல்லோரைப் போலவும் என்றார்கள்.எல்லாம் போய்.அடுத்த கட்டமாக கிராமப் புரமாக தோட்டம் செய்ய காணி வாங்கினால் போதும் என்று.
ஐயையோ ஐயையோ.யாரோ ஆரம்பித்து வைச்ச மரதனில் ஓடப் போய்.பாதிப் பேர் ஆஸ்பத்திரியும் கையுமாய் மீதிப்பேர் வட்டி கடன் சீட்டு என்று நாசமாய் போய்.

என்னடா வாழ்க்கை என பிசத்த வெளிக்கிட்டு விட்டார்கள்.ஆசைப்படுங்கள் வாழ்க்கை அழகாகும் பேராசைப்படுங்கள்.வாழும் வாழ்க்கையை அழுக்காகும்.ஆயிரம் வருடம் ஆயுள் என எப்படி நினைக்கத் தோன்றுகிறதோ இவர்களுக்கு மட்டும்.அறுபது அறுபத்தைந்தோடு ஆட்டம் குளோஷ் இதில் ஏனப்பா நெருப்பெடுத்து உறவுகள் சொந்தங்களை விட்டு ஓடுகிறீர்கள்.

கொஞ்சமாவது நின்று நிதானியுங்கள்.இத்தனைக்கும் ஒரே ஒரு காரணம் தான்.அடுத்தவனை தன்னோடு ஒப்பிட்டு பொறாமைப்பட்டு காசால் கெளரவம் தேடுவது. ஒன்றே ஒன்று தான் காசால் யாவையும் வாங்கலாம் மனம் பேராசைப்படும் நிம்மதியைத் தவிர.


நிம்மதி என்பது அன்பு கருணை பாசம் பகிர்வு ஆறுதலில் ஒற்றுமையில் மட்டுமே தங்கியுள்ளது.என்னமோ இந்த தலைமுறையிடமே யாவும் இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.நாளைய தலைமுறை கணனிக்குள் புகுந்து பைத்தியங்களாகவே அலையும்