லொத்தர் சீட்டு வாங்காமலேயே நபரொருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.!

செய்திகள்

அமெரிக்காவில் 2.04 பில்லியன் டொலர் பரிசு விழுந்த லொத்தர் சீட்டை விற்பனை செய்த வியாபாரிக்கு 1 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது.நமக்கெல்லாம் லொத்தர் சீட்டு வாங்கினால் தான் பரிசு விழும், ஆனால் ஜோசப் சஹாயித் என்பவருக்கு லொத்தர் சீட்டு வாங்காமலேயே அதிர்ஷ்டம் அடித்துள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருவது,அமெரிக்காவில் லொத்தர் சீட்டு விற்பனை செய்யும் கடையில் சீட்டு வாங்கிய நபருக்கு 2 பில்லியன் டொலர் என்ற மிகபெரும் பரிசு விழுந்துள்ளது.இதையடுத்து சில்லறை விற்பனை போனஸாக லொத்தர் சீட்டை விற்பனை செய்த ஜோசப்புக்கு 1 மில்லியன் டொலர் கிடைத்துள்ளது.

இது பற்றி ஜோசப் கூறுகையில்,எனக்கு கிடைத்த போனஸ் பரிசை குடும்பத்தாருடன் பங்கிட்டு கொள்வேன். எங்கள் கடைக்கு வந்து லொத்தர் சீட்டு வாங்குமாறு நான் பலரையும் ஊக்குவிக்கிறேன், நீங்களும் வெற்றியாளராக மாறலாம் என கூறியுள்ளார்.