நடுத்தர வருமானமுள்ள ஒரு குடும்பம் பண கஷ்டத்தில் சிக்குவதற்கு முக்கிய காரணங்கள் இவை தான்.!! இதை மட்டும் மாற்றினால் நீங்களும் கோடீஸ்வரர் தான்.!!

செய்திகள்

தன்னைவிட பொருளாதாரத்தில் உயர்ந்தவரின் உணவு, உடை மற்றும் வாழ்வியல் முறைகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவது. உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா?ஆயுள்/விபத்து காப்பீடு திட்டம் எதுவும் இல்லாமல் எதிர்பாராத மருத்துவ செலவினால் தவிப்பது.


நிலையில்லா வேலை/வருமானம் என்பதை அறிந்திருந்தும் கூட சிக்கனம், சேமிப்பில் விழிப்புணர்வு இல்லாதது.
குறுகிய காலத்தில் இரு/மும்மடங்கு லாபம் என்ற பேராசையால் அறிமுகமற்ற வழிகளில் முதலீடு செய்து, இழப்பது. கிணற்று நீரையும் இது போன்ற ஆற்று வெள்ளம் அடித்துச் செல்லும்; கவனம் தேவை.

பெருமைக்கு ஆசைப்பட்டு உறவினர்/நண்பர்களுக்கு கடன் கொடுத்து, திரும்ப கேட்க தயங்கி, தன் சேமிப்பை இழந்ததோடல்லாமல் உறவும் முறியலாம்.திருமணம், பண்டிகை காலங்களில் விரலுக்கு ஏத்த வீக்கம் அறியாமல் செலவுகள் செய்து பின்னர் திண்டாடுவது.


பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க நினைத்து அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் சேர்த்து, வட்டிக்கு கடன் வாங்கி முழிப்பது.வேலைக்கு சென்று சம்பாதித்து விடலாம் என்ற அதீத கற்பனையில் கல்லூரி படிப்பிற்கும் கடன் வாங்கி மூழ்குவது.

பதவி/சம்பள உயர்வினால் கூடுதலாக கிடைத்த பணத்தில் ஆடம்பர மனப்போக்கு. அனாவசிய வீட்டு உபயோக பொருட்கள், விலை அதிகமான கார், 3 BHK வீடு, செலவு அதிகம் பிடிக்கும் சுற்றுலா.எத்தனை நாளைக்கு தான் சம்பளத்துக்கு வேலைக்கு போவது? ஏதாவது பிசினஸ் ஆரம்பிச்சா.என்ற முதிற்சியற்ற உந்துதல் தற்போது


இளைஞர்களுக்கு பெரும் பாதாள சறுக்கலாக இருக்கிறது.போதிய அனுபவம், வழி நடத்தல் இல்லாமல் லட்சங்களில், கோடிகளில் கடன் சிக்கல்.மொத்தத்தில் என் தாத்தா ஒரே வரியில் சொல்லிவிடுவார்.நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.