இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் மிக முக்கிய தேவையாக இருப்பது பணம்தான்.ஏழைகளின் அன்றாட தேவைகளுக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் பணக்காரர்களுக்கு ஆடம்பர தேவைகளுக்காக பணம் தேவைப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் பணம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக தான் இருக்கிறது. ஆனால் ஏனோ சிலரிடம் மட்டும் பணம் தங்குவதே கிடையாது.தினமும் உழைப்பார்கள், சேமிக்க முயற்சிப்பார்கள் ஆனாலும் ஏதோ ஒரு வழியில் பணம் செலவாகிக் கொண்டே இருக்கும்.
இதற்கு ஒரே ஒரு மரிக்கொழுந்து கட்டு இருந்தால் போதும் இதை வைத்து பணத்தை நம்மால் எளிதாக ஈர்த்து விட முடியும்.முதலில் சிறிய ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துணியை பூஜை அறையில் விரித்து வைத்து உங்கள் குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

பணம் தினம் என்னை நாடி வரவேண்டும்.பணத்தை நான் தொடர்ச்சியாக சேமிக்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொள்ள வேண்டும்.அதனைத் தொடர்ந்து ஒரு மரிக்கொழுந்து கட்டை அந்த துணையின் மேல் வைக்க வேண்டும். பிறகு அதன் மேல் தாழம்பூவையும் அதற்கு மேல் தூள் செய்த பச்சை கற்பூரத்தையும் குங்குமத்தையும் வைத்துவிட்டு அந்த துணியை அப்படியே முடிச்சு போட்டு கட்டி விட வேண்டும்.
இப்பொழுது இந்த துணி மூட்டையை எடுத்துக் கொண்டு பணப்பெட்டியில் வைத்து விட வேண்டும்.சிலர் பணப்பெட்டி பயன்படுத்தாமல் பணத்தை அலுமாரியில் அப்படியே வைப்பதுண்டு. நாம் எங்கு பணத்தை வைக்கிறோமோ அந்த இடத்தில் இந்த மூட்டையை வைத்தால் போதுமானது.

அதன் பிறகு தொடர்ச்சியாக நீங்கள் கவனித்து வந்தால் தெரியும் பணமானது உங்களை தேடி வர துவங்கும். நாட்கள் போக போக நீங்கள் மரிக்கொழுந்து வைத்திருக்கும் இடத்தை நாடி பணம் வந்து கொண்டே இருக்கும்.ஒரேஅடியாக கோடிக்கணக்கில் வந்து விடும் என்று சொல்ல முடியாது உங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு பணம் நிச்சயம் உங்களை வரும், உங்களின் தேவையற்ற செலவுகளும் அதே போன்று குறைந்து கொண்டே வரும்.
அதேபோல நீங்கள் பயன்படுத்தும் உங்கள் பர்சில், பாக்கெட்ல் சிறிய அளவிலான மரிக்கொழுந்தை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.இதன் மூலமும் பணமானது உங்களை வந்தடையும். அதாவது பணம் உங்களை வந்தடைவதற்கான வழி பிறக்கும் என்ரூ கூறப்படுகிறது.

அதேபோல் மரிக்கொழுந்தை நீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை வீடு முழுக்க தெளிப்பதன் மூலமும் நல்ல அதிர்வலைகள் வீட்டை நாடிவரும்.இது வாஸ்து குறைபாடுகளையும் போக்கும் என்றொரு கருத்தும் உண்டு. முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.