உங்கள் ராசிப்படி இந்தவயதில் தானாம் வெற்றி நிச்சயம்.!! வாங்க பார்ப்போம்..!!

ஜோதிடம்

சூரியன், நிலா, செவ்வாய், ராகு, கேது போன்ற கிரகங்களின் நிலைகளை பொறுத்து கணிக்கப்பட்டது. இதனை பொறுத்து ஒருவரின் ராசியை பொறுத்து அவர்களது வாழ்க்கையில் வெற்றிக்கான பாதை எந்த வயதில் திறக்கும் என்பதை கணித்துவிடலாம்.


மேஷம்இயற்கையிலேயே தலைமை பண்பு அதிகமுள்ள மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் சென்றால் நிச்சயம் அவர்கள் முதலாளிகளாக மாறக்கூடியவர்கள். அவர்களுக்கு வெற்றியின் பாதை 16, 22, 28 மற்றும் 36ல் திறக்கும். இந்த காலகட்டங்கள் அவர்களுக்கு திருப்புமுனையாக அமையும்.

ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் பொறுமையும், எதார்த்தமும் மிக்கவர்கள். இவர்களால் எந்த ஒரு சூழலுக்கு ஏற்றமாறியும் உடனே மாற்றிக்கொள்ள இயலும். இவர்கள் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி வெற்றிக்கான பாதையை திறக்கும் காலம் இவர்களின் 25,36 மற்றும் 42 வயதுகளில் ஆகும்.


மிதுனம்இயற்கையிலேயே அதிக ஆற்றல் மிக்க நீங்கள் போரடிக்கும் சூழலில் வேலை செய்வது உங்களுக்கு ஏற்றதல்ல. அனைத்து வேலைகளையும் வேகமாக முடிக்க நினைக்கும் நீங்கள் 22, 32, 32 மற்றும் 42 வயதுகளில் அதிக வெற்றியை ருசிப்பீர்கள்.

கடகம்12 ராசிகளிலியே அதிக அதிர்ஷ்டசாலியான ராசி என்றால் அது கடக ராசிதான். பணியிடங்களில் உங்களை போல அறிவுரைகள் வழங்க எவராலும் முடியாது. இவர்களுக்கு கிட்டதட்ட ஆறு காலகட்டங்கள் தீர்ப்புமுனையாக அமையும். இவர்கள் 16, 22, 24, 25, 28 மற்றும் 33 வயதுகளில் வெற்றியை அதிகம் சுவைப்பார்கள்.

சிம்மம்சிம்மராசிக்காரர்கள் சுதந்திரமானவர்களாகவும், மற்றவர்களுக்கு தூண்டுதலாகவும் இருப்பார்கள். வேலைகளில் நீங்கள் செலுத்தும் கவனமே உங்களுக்கான வெளிச்சத்தை பெற்றுத்தரும். குழுவாக செயல்படும்போது உங்கள் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். இவர்கள் தங்களின் 16, 24, 26 மற்றும் 31 வயதில் வெற்றியை அதிகம் சுவைப்பார்கள்.


கன்னிஅதிக கருணை உணர்வு கொண்ட நீங்கள் எளிதில் மற்றவர்களுடன் பழகிவிடுவீர்கள். உங்கள் வேலைகளை முடிக்க மற்றவர்களின் உதவி தேவையில்லை. உங்களுக்கு 22, 24, 28, 33 மற்றும் 35 வயதுகளில் உங்களுக்கு வெற்றியின் பாதை பிரகாசமாக இருக்கும்.

துலாம்சிறப்பான குணங்களை கொண்ட உங்களின் கூடுதல் சிறப்பே அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே குழுவாக செயல்படக்கூடியவர்கள். மற்றவர்களின் மனஓட்டத்தை எளிதில் புரிந்துகொள்ள கூடிய நீங்கள் இதனை உங்கள் எதிர்காலத்திற்காக பயன்படுத்தினால் உங்கள் எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும். உங்களுக்கு 25, 29, 33, 35 மற்றும் 36 வயதில் வெற்றிகளின் வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.


விருச்சிகம்உங்களுக்கு வேலை மீதும், கடமை மீதும் அதிக விசுவாசமாக இருப்பார்கள் . எந்தவித கவனச் சிதறல்களும் இன்றி நீங்கள் உங்கள் வேலையே முடிக்கக்கூடியவர்கள். உங்களுக்கு 22, 26, 30 மற்றும் 37 வயதுகளில் வெற்றியின் பாதை திறக்கும்.

தனுசுவேலையை பொறுத்தவரையில் நீங்கள் எப்பொழுதுமே சரியாகத்தான் செயல்படுவீர்கள். விதிமுறிகளால் உங்களை கட்டுப்படுத்தாதவரை நீங்கள் சிறகை விரித்து மேலே சென்றுகொண்டே இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சரியானதாகத்தான் இருக்கும். உங்களுக்கு 23, 29, மற்றும் 37 ஆகியவை திருப்புமுனை காலமாக அமையும்.

மகரம்கடினமான உழைப்பாளியான நீங்கள் எப்பொழுதும் அனைத்திலும் முன்னணியில் இருக்க விரும்புவீர்கள். அதற்கான அர்ப்பணிப்பும் உங்களிடம் இருக்கும். எந்நேரமும் வேலையை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கும் நீஙகள் அதிலிருந்து சிறிது வெளியே வந்து ஆசுவாசப்படுத்தி கொள்வதும் நல்லது. உங்களுக்கு 25, 33, 36 மற்றும் 41 வயதுகளில் வெற்றிகள் குவியும்.

கும்பம்கட்டுப்பாடுகள் இல்லாத வேலை அமைந்தால் உங்களின் வளர்ச்சி அசுரத்தனமானதாக இருக்கும். உங்களின் ஆளுமைக்காகவே எப்போதும் உங்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். நீங்கள்25, 28, 34 மற்றும் 43 வயதுகளில் எதைத்தொட்டாலும் வெற்றிதான்.

மீனம்எதை செய்தாலும் சிறப்பாக செய்யவேண்டும் என்று நினைக்கும் நீங்கள் எப்பொழுதும் பிறருக்கு ஜால்ரா அடித்து முன்னேற விரும்பமாட்டீர்கள். செய்யும் வேலையை சாதுர்யமாகவும், அதேசமயம் உணர்வுபூர்வமாகவும் செய்து சாதிப்பீர்கள். 26, 28, 34, 39 ஆகிய வயதுகளில் உங்கள் அதிர்ஷ்டமும், வளர்ச்சியும் உச்சத்தில் இருக்கும்.-source: boldsky