கிளிநொச்சியில் தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறிவரும் இளம் பெண் பிரியா..!! வாழ்த்துக்கள்.!

செய்திகள்

தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறிவரும் பெண் தொழில்முயற்சியாளர் பிரியா Priya Nadesan
இந்த முயற்சியாளரின் பெயர் பிரியா. கிளிநொச்சியில் வசிக்கிறார். வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும்,


பொருளாதார ரீதியில் முன்னேறவேண்டும் என்கிற கனவோடு, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். சிலபல முயற்சிகளில் தோல்வியும் கண்டார். ஆனாலும் சோர்ந்துபோகவில்லை. கடைசியில், கச்சானில் லட்டுக்கள் செய்து, விற்பனை செய்து பார்த்தார். லட்டுக்களின் சுவை வாடிக்கையாளர்களைக் கவர்ந்து
விட்டது.

அவர்கள் விரும்பி வாங்கி உண்ணத் தொடங்கினார்கள். பிரியாவின் வியாபாரமும் பெருகலாயிற்று.வழக்கமாக எல்லோரும் செய்வதை தானும் செய்யக்கூடாது என்கிற எண்ணம் கொண்டவர் இவர். அதனால் புதுமையான சுவையில் லட்டுக்களை உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்பினார். கூடவே சுவையும் மணமும்மிக்க கோப்பி தூளையும் உற்பத்திசெய்து சந்தைப்படுத்தினார்.

விளைவு… நிறைய தோல்விகளின் பின்னர் வெற்றிப்படியில் கால்வைத்தார் இந்த இளம் தொழில் முயற்சியாளர் பிரியா. இன்று PNS Entrepreneurship எனும் நிறுவனத்தை நிறுவி, அதை நல்லமுறையில் நடத்திவருகிறார். தொடக்கத்தில் பல்வேறு எதிர்ப்புக்களையும் சவால்களையும் சந்தித்ததாகக் குறிப்பிடும் இவர் ‘பெண்கள்

தன்னம்பிக்கையோடு உழைத்து சொந்தக்காலில் நிற்கவேண்டும்’ என்கிறார். உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு சிறந்த Brand ஐ உருவாக்குவதே தனது கனவு என்று குறிப்பிடும் பிரியா, அதற்காக அயராது பாடுபடுவதாகவும் சொன்னார். இந்த இளம் தொழில்முயற்சியாளருக்கு எமது வாழ்த்துக்கள்.