பணக்கஷ்டம் நீங்க காலை எழுந்த உடன் இதை ஒரே ஒரு முறை சொல்லுங்கள் போதும்…!

ஜோதிடம்

ஆழ்மனது பிரகடனம் என்றால் என்ன தெரியுமா..? நாம் எதை நோக்கி பயணம் செய்ய விருப்பம் கொள்கிறோமோ..அதையே எப்போதும் நினைத்து, அதையே மீண்டும் மீண்டும்சொல்லி நம் மனதில் பதிய வைத்து விட்டால் போதும்.அவ்வாறு பதியும் அந்த ஆழ்மனது பிரகடனம் வாழ்க்கையில் நம்மை மேலோங்க வைத்து விடும்.


அதாவது நமக்கு நாமே ஒரு ஆலோசனையை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். உதாரணம் 48 நாட்களுக்கு விரதம் இருப்பது .. ஆறு மாதங்கள் விரதம் இருந்து மந்திரம் கூறுவது என சில விஷயங்களை நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் அல்லவா…? அதெல்லாம் எதற்காக தெரியுமா…? நம் வாழ்க்கையில் நாம் அடைய நினைப்பதை வேண்டி அதனையே திரும்ப திரும்ப நம் வாயால் சொல்ல வைப்பதே மந்திரங்கள் என்பதுஎத்தனை பேருக்கு தெரியும்.

விரைவில் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என உங்கள் மனது சொல்கிறது என்றால் .. அதையே நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லி உங்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது,அந்த சக்தி இந்த பிரபஞ்சத்தில் எங்கு இருந்தாலும் சரிஅது நம்மை வந்து சேரும்.


நம் முன்னோர்கள் எதை அடைவதாக இருந்தாலும் சரி, அதனை அவர்களது ஆழ் மனதில் பதிய வைத்து,அடைவதை அடைந்தார்கள்.இந்த விஷயத்தை போதனைகளாக எடுத்துக்கொள்ளாமல் சோதனையாக எடுத்துக் கொண்டு வாழ்வில் சாதனை படைக்க தொடங்குங்கள்

எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ.. அப்போதெல்லாம் ஒரு பேப்பர் எடுத்து அதில் அந்த வார்த்தையை எழுதி வைத்து பாருங்கள். எல்லா இடத்திலும் நான் முன்னேறி வருகிறேன் என உங்கள் மனதில் நினைத்து, அதையே எழுதி பாருங்கள்.. நீங்கள் உண்மையில், உங்கள் வாழ்வில் முன்னேறி தான் வருவீர்கள்.

இதேபோன்று, நான் ஒவ்வொரு நாளும் அபரிதமான வியாபார வாய்ப்பை ஈர்த்துக்கொண்டே இருக்கிறேன் என தினமும் சொல்லி பாருங்கள்.வியாபாரம் நன்றாக நடந்து அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டிப்பிடித்து விடுவீர்கள்


பணம் வந்துக்கொட்ட வேண்டுமா ..?நாளுக்கு நாள் செல்வம் என்னை நோக்கி வந்துக்கொண்டே இருக்கின்றன..நான் நாளுக்குநாள் வளர்ந்துக்கொண்டே இருக்கிறேன் என சொல்லிப்பாருங்கள்.. பணம் உங்களை எப்படி தேடி வருகின்றதுஎன்று…நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என சொல்லி வாருங்கள். உங்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் வாழ்ந்து வருவதை உணர்வீர்கள்.-Source: asianetnews