புத்தளம் கற்பிட்டிகடற்கரைக்கு படையெடுத்த மக்கள்..! வெளியான முக்கிய செய்தி.!!

செய்திகள்

புத்தளம் கற்பிட்டி கண்டகுழி பகுதியில் இன்று (11) அதிகாலை திடீரென சுமார் 14 திமிங்கலங்கள் உயிருடன் கரையொதுங்கிய நிலையில் மக்கள் அவற்றைனை பார்ப்பதற்காக படைடுத்தனர்.இவ்வாறு கரையுதுங்கிய திமிங்கிலங்களுள் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


திமிங்கலங்களை கண்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கற்பிட்டி கடற்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடும் பிரியத்தனத்திற்கு மத்தியில் திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.

கரைக்கு வந்த திமிங்கலங்களை கயிறுனால் கட்டி இயந்திரப்படகு மூலம் இழுத்துக் கொண்டுச் சென்று கடலின் ஆழமான பகுதியில் விடுவித்தனர். அதேசமயம் உயிரிழந்த 3 திமிங்கலங்களங்களையும் பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட உள்ளதாக கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த திமிங்கலம் (Filet Whale) பைலட் வேல் என அழைக்கப்படும் திமிங்கலம் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.அதேவேளை அண்மையில் கற்பிட்டி தழுவ பகுதியில் உயிருடன் கரையொதிங்கிய புள்ளிச் சுறாவை கடற்படையினர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடலுக்குள் மீண்டும் அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.